உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

எம். ராமன், திருச்சி: ஒருவன் வாழ்க்கையில், வெற்றி தானாகக் கிடைக்குமா?வெற்றி என்பது தானாகக் கிடைப்பதில்லை. அது, உழைப்பால் பெறக் கூடிய ஊதியம்... முயற்சி செய்வதால் கிடைக்கக் கூடியது... உழைத்து, தைரியமாக செயல்படக் கூடியவருக்கும், உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுபவர்களுக்கும், வெற்றி நிச்சயம்!* ஆ. மாடக்கண்ணு, தென்காசி: எம்.ஜி.ஆர்., போல, சினிமா நடிகர் யாராவது, தமிழக முதல்வர் ஆக வாய்ப்பு உள்ளதா?சினிமா நடிகர்கள் எல்லாருமே, 'லெட்டர் பேட்' கட்சிகள் தானே வைத்துள்ளனர். அவர்களில் எவருக்குமே முதல்வராகும் வாய்ப்பில்லை!மு. நாகூர், சாத்தக்கோன்வலசை: லோக்சபா தேர்தலை சந்திக்கும் முன்பாகவே, 'இண்டியா' கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு விட்டதே...இவர்கள் ஒன்று சேரும்போதே எதிர்பார்த்தது தானே... கூட்டணியில் உள்ள, 28 கட்சிகளின் தலைவர்களும், பிரதமர் பதவியில் நாட்டம் கொண்டுள்ளனர். கூட்டணி எப்படி நீடிக்கும்?   மா. அர்விந்த், பாப்பான்குளம், தென்காசி: 'நான், தேர்தலில் போட்டியிட மாட்டேன்...' எனக் கூறிய, வைகோவின் மகன், துரை வைகோ, 'லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து, கட்சி தலைமை முடிவு செய்யும்...' என, தற்போது, 'பல்டி' அடித்துள்ளாரே...அரசியலுக்கு வந்து விட்டால், இதெல்லாம் சகஜம் என்பது, உங்களுக்கு தெரியாதா?   நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி, நெல்லை: சேலம் தி.மு.க., மாநாடு நடைபெறும் இடத்தில், எட்டு திக்குகளிலும், எட்டு ஆடுகள் பலி கொடுத்திருப்பது குறித்து...ஹிந்து மதத்தின் மீது, தி.மு.க.,வினருக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதையே காட்டுகிறது!க.ஆ. சரோ ஆனந்த், சென்னை: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், உயிரோடு இருப்பதாகவும், மீண்டும் திரும்பி வருவார் என, நம்புவதாகவும், வைகோ கூறியிருக்கிறாரே...பாவம், வைகோவிற்கு வயதாகி விட்டது. இரவில் கண்ட கனவை எல்லாம் பகலில் அறிக்கையாக வெளியிட்டு, 'தமாஷ்' செய்து கொண்டிருக்கிறார்!   * கு. கணேசன், மறைமலைநகர்: பெரும்பாலான ஊடகங்கள், ஆட்சியாளர்களை பகைத்துக் கொள்ள விரும்பாமல் இருக்கும் இன்றைய சூழ்நிலையில், 'தினமலர்' நாளிதழ் மட்டும், ஆட்சியாளர்களின் தவறுகளை தைரியமாக சுட்டிக் காட்டுகிறதே... எப்படி?குமரி மாவட்டத்தை, தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற போராட்டத்திற்கு ஆதரவாக, கேரள மன்னரின் ஆட்சிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டதே, 'தினமலர்' நாளிதழ்! ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும், சுட்டிக் காட்டுவதே, 'தினமலர்' இதழின் கடமை!ஆர். ரகோத்தமன், மதுரை:எனக்கு சினம் வந்து கொண்டே இருக்கிறதே...வேண்டாம்... சினத்தை வென்றவர், வாழ்வில் வெல்கின்றனர். சினத்தில் மாட்டிக் கொண்டோர், வாழ்வில் தோல்வியை சந்திப்பர். எனவே, சினத்தை ஒழித்துக் கட்டுங்கள்!கு. கார்த்திக், சேலம்: எண்ணம் என்பது எப்படி இருக்க வேண்டும்?அடுத்தவர் நம்மை பற்றி என்ன எண்ணுவார் என்ற எண்ணம் இல்லாமல், அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தான், நமது எண்ணமாக இருக்க வேண்டும். இதுவே, வாழ்க்கையில் வெற்றியைத்தரும்!   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !