உள்ளாட்சி தேர்தல்; விலைக்கு போகப் போகிறீர்களா?
தமிழகத்தில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. தகுதியான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம்மிடமே உள்ளது; இந்த கதையை படித்த பிறகு முடிவெடுங்கள்:ஒரு அரசியல்வாதி, முதியவர் ஒருவரிடம், 1,000 ரூபாய் கொடுத்து, 'எனக்கு ஓட்டளிக்க வேண்டும்...' என்றார்.'எனக்கு பணமெல்லாம் வேண்டாம்; ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும்...' என்றார், முதியவர்.அரசியல்வாதியும் எங்கெல்லாமோ தேடி பார்த்தார்; 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கழுதையே கிடைக்கவில்லை. முதியவரிடம், '10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கழுதையே கிடைக்கவில்லை...' என்றார்.'என் மதிப்பு, கழுதைய விட குறைவா... ஆகையால், நான், என் ஓட்டை விற்க மாட்டேன்...' என்றார், முதியவர்.இன்றைய சந்தை மதிப்பு விபரம் : ஒரு எருமையின் விலை - - 80 ஆயிரம் ரூபாய்; பசு மாடு -- 50 ஆயிரம்; ஆடு -- 10 ஆயிரம்; நாய் - 5,000 முதல் 6,000 ரூபாய் வரை; பன்றி -- 3,000 முதல் 5,000 ரூபாய் வரை.தேர்தலின்போது, தன்னை விற்கிற நபரின் விலை மட்டும், 500 முதல் 1,000 ரூபாய்.இது, ஒரு பன்றியின் விலையை விட மிகவும் குறைவு. யோசித்து, கவுரவத்துடன் ஓட்டளிப்பீர்கள் தானே! — ஜோல்னா பையன்