பைக்கில் உலகம் முழுக்க...
கேரள மாநிலம், பாலக்காடு, கல்பாத்தி அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண், லட்சுமி. வங்கி அதிகாரியின் மகளான இவருக்கு, அக்ரஹார கட்டுப்பாடுகள் ஒத்துவரவில்லை. வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு, சாதனை புரியும் லட்சியத்துடன், அதற்கான தகுதிகளை வளர்க்க ஆரம்பித்தார்.இன்ஜினியர் பட்டதாரியான லட்சுமி, 'மோட்டார் பைக்'கில் தன்னந்தனியாக இந்தியா முழுவதும் சுற்றி வர விரும்பினார். தன் ஆசையை அப்பாவிடம் கூற, முதலில் அவர் தயங்கினாலும், பிறகு சம்மதித்தார்.பாலக்காட்டிலிருந்து பைக்கில் கிளம்பியவர், 59 நாட்கள், 11 ஆயிரத்து 400 கி.மீ., துாரம் பயணித்து, திரும்பியுள்ளார். ஆனாலும், பைக்கில் பயணிக்கும் ஆர்வம் சற்றும் குறையவில்லை.தன்னைப் போலவே ஊர் சுற்றுவதில் ஆர்வமுள்ள அனீஷ் என்ற இளைஞனை மணந்து கொண்டார். ஒரு குழந்தைக்கு அம்மாவான போதும், தன் பயண மோகத்தை கைவிடவில்லை. கணவருடன் சேர்ந்து, உலகத்தை சுற்றி வர முடிவு செய்துள்ளார்.கணவரை பற்றி குறிப்பிடும்போது, 'ஊர் சுற்றவும், அசைவ உணவை சாப்பிடுவதற்காகவும் தான் இவரை மணந்து கொண்டேன்...' என்கிறார்.துணிச்சல்கார பெண் தான்!ஜோல்னாபையன்