உள்ளூர் செய்திகள்

அழகுக் குறிப்பு!

* முல்தானிமட்டியுடன், பன்னீர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து வீட்டிலேயே, 'பேஸ் பேக்'குகள் போல் தயாரித்து பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், தோலின் நிறம் மற்றும் அழகை பாதுகாக்கலாம்* முகத்தில் வரும் கரும் புள்ளி, வெண் புள்ளி போன்ற பிரச்னைகளுக்கு, முல்தானிமட்டியுடன் வேப்ப இலையின் விழுதைக் கலந்து தடவி, காய்ந்ததும், முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகளும், வெண் புள்ளிகளும் நீங்கி, சருமம் பொலிவடையும்* கோடையில் முல்தானிமட்டி பயன்படுத்தும்போது, சிலருக்கு, முகத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவர்கள் முல்தானிமட்டியுடன், சந்தனத்தை கலந்து பூசினால், எரிச்சல் குறைந்து, குளுமையாக இருக்கும்* முகத்தில் முல்தானிமட்டியை தடவி, 15 நிமிடங்கள் வைத்திருந்து, தண்ணீரில் கழுவினால், முகம் அழகாகவும், பளபளப்பாக இருக்கும். * முகத்தில் பருக்கள் மற்றும் அதிகமான எண்ணெய் சுரப்பு பிரச்னை உள்ளோர் பன்னீருடன், முல்தானிமட்டியை குழைத்து, ஒரு சிறிய, 'பிரஷ்' பயன்படுத்தி முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், விரைவில் இப்பிரச்னைகள் சரியாகும்.ஏ.எஸ்.ராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !