பிட்ஸ்(ஸா)
சில ஓவியர்கள், ஆஞ்சநேயரை பலவித பாவனைகளில் வரைகின்றனர். சமீபத்தில் ஒரு ஓவியர், ஆஞ்சநேயர் தியானம் செய்வதுபோல் வரைந்திருந்தார். மிகப் புராதனமான பக்தர் என்பதை மனதில் கொண்டு, அந்த ஓவியர், ஆஞ்சநேயரை வயதானவராக வரைந்திருந்தார்.ஸ்ரீ சீதா ராமசந்திர மூர்த்தியால் சிரஞ்சீவிப் பட்டம் பெற்ற ஆஞ்நேயருக்கு மூப்பு ஏது? ராமபிரான் அருளால், என்றைக்கும் அவர் பலசாலியாகவும், மாறாத இளமையும் பொருந்தியவர். 'மனிதருக்கு ஏற்படுவது போன்ற மூப்பு, திரை, மரணம் ஆகியவை சிரஞ்சீவி பட்டம் பெற்றவருக்கு கிடையாது...' என்று நண்பன் நாராயணன் வாதாடுவான்.