உள்ளூர் செய்திகள்

பிட்ஸ்(ஸா)

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று - என்கிறது திருக்குறள். 'ஒப்புக் கொள்கிறேன்; ஆனால், விருந்தாளிகள் நம் வீட்டில் தங்குவது போல் தங்கி, நைசாக ஓட்டலுக்கு போய், விதவிதமாக சாப்பிட்டு வருகின்றனரே... அவர்களுக்கு மட்டும், 'விருந்து புறத்தாத தானுண்டல்' அறிவுரை கிடையாதா?' என்று கேட்டான் நண்பன் நாராயணன்.அதனால், வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள், நைசாக ஓட்டலுக்கு போய் இஷ்டத்துக்கு தின்று விட்டு, கமுக்கமாக வருவதற்கு பதில், வரும்போது வெறும் கையை வீசிக் கொண்டு வராமல், ஓட்டலிலிருந்து ஏதாவது பலகாரம் பார்சல் கட்டி வந்தால், அவர்களுடைய மதிப்பு, 'ஜிவ்'வென்று உயரும். என்ன விருந்தாளிகளே... செய்வீர்களா?— பாக்கியம் ராமசாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !