உள்ளூர் செய்திகள்

டீ கடையில் சாராயம்!

மது விலக்கு அமலில் உள்ள மாநிலங்களிலும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை பார்க்கலாம். 'மது வகைகள் கைவசம் வைத்திருந்தால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்...' என சட்டம் இருந்தும், அம்மாநிலத்திலுள்ள குடிமகன்கள் அலட்டிக் கொள்வதில்லை.மணிப்பூர் மாநிலம், இம்பாலாவில், சாலையோர டீ கடைகளுக்கு டீ குடிக்க சென்றால், 'சாராயம் வேண்டுமா?' என்று கேட்கின்றனர். நாம் கடைக்காரரை சந்தேகத்துடன் பார்த்தால், 'நம்பிக்கை வரலையா, இதோ காட்டுகிறேன்...' என்றபடி கடைக்கு பின்புறம் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று, சாராய பாட்டில்களை காட்டுவதுடன், அங்கே ஒருவர், சாராயம் காய்ச்சுவதையும் காணலாம். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !