கார்ஸ் காயின்!
துபாயில், வித்தியாசமான பெரிய பெரிய மால்களும், கட்டட அமைப்பும் நம்மை பிரமிக்க வைக்கும். யாரைப் பார்த்தாலும், சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்றே தோன்றும். தற்போது, துபாயில், சொகுசு கார்களின் வெளிப்பகுதி முழுவதும் நாணயங்களைக் கொண்டு, வடிவமைக்கும் பேஷன் வந்து விட்டது. இதற்கு, 'கார்ஸ் காயின்' என்று பெயர். நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் காசுகளை கொண்டு, கார்களை அழகுபடுத்துகின்றனர். இந்த காசுகளை அவ்வளவு எளிதில் பிரித்து எடுக்க முடியாது. மேலும், புழக்கத்தில் இல்லாத காசுகளை, பாலிஷ் செய்து பயன்படுத்தி, காரையே ஜொலிக்க வைக்கின்றனர்.இப்படி காசுகளை கொண்டு கார்களை வடிவமைப்பதால், காரின் எடை கணிசமாக கூடும். இருப்பினும், இந்த காசு காரில் பவனி வந்தால், அனைவரும் வைத்த கண் வாங்காமல், பார்க்கின்றனர் என்பது தான், 'ப்ளஸ் பாயின்ட்!' 'காசேதான் கடவுளப்பா...' என்பது மாறி, 'காரே தான் காசுப்பா...' என்றாகி விட்டதே!— ஜோல்னா பையன்.