உள்ளூர் செய்திகள்

சமையல் டிப்ஸ்...

* கோதுமை மாவில் இளநீரை விட்டு பிசைந்து சப்பாத்தி செய்தால் ருசியாக இருக்கும்* பாகற்காயை கொட்டை நீக்கி, வட்ட வடிவில் மிக மெல்லியதாக நறுக்கி, வெங்காயம், தேங்காய் துருவல், வேக வைத்த பாசிப் பருப்புடன் பொரியல் செய்யும் போது, ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால், சுவையாக இருக்கும்* இட்லி மீந்து போனால், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, அதில், இட்லிகளை துண்டு துண்டாக போட்டு புரட்டி எடுத்தால், சுவையான, 'இட்லி ப்ரை' தயார்* ஊறுகாய் மேலே அதிக எண்ணெய் மிதந்தால், அதை காரக்குழம்பு வைக்கும்போது பயன்படுத்தலாம்* ரசம் வைக்கும்போது, அது கொதித்து வருகிற நிலையில், ஒரு கைப்பிடி கொத்தமல்லியை போட்டு பாருங்கள். ரசம் சுவை பிரமாதமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !