சமையல் டிப்ஸ்!
தேங்காய் மற்றும் எலுமிச்சையில் கலந்த சாதங்கள் செய்யும்போது, பொட்டுக் கடலையை வறுத்துப் போட்டு கிளறினால், மிகவும் சுவையாக இருக்கும்.ஐஸ்கிரீம் தயாரிக்கும் போது, அந்த கலவையுடன், இரண்டு டீஸ்பூன் குளுகோஸ் சேர்த்தால், மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.நவதானியத்தை ஊற வைத்து, நீரை வடித்து, முளை கட்டியபின், உப்பு, காரம் சேர்த்து அரைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உலர வைத்தால், புதுமையான குழம்பு வடகம் தயார்.பீட்ரூட் தோல், மிளகாய், உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், சீரகம் ஆகியவற்றை வதக்கி, அரைத்து, சட்னி செய்தால், பூரி, சப்பாத்திக்கு ஏற்ற, 'சைடு டிஷ்!'