அப்பாவின் நினைவில் மகள்!
நடிகர் கலாபவன் மணி மறைந்து, ஒரு ஆண்டாகிறது. அவரது ஒரே மகளான ஸ்ரீ லட்சுமி, தந்தையை பற்றி கூறும் போது, 'நான் படித்து, டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார், என் அப்பா. அவர் என்னிடம், 'நீ டாக்டரானால், உனக்கு மருத்துவமனை கட்டி தருவேன்; அம்மருத்துவமனையில், ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்...' என்பார்.'அவர், ஏழ்மையில் வாழ்ந்தவர் என்பதால், யார் பசித்திருந்தாலும் சகிக்க மாட்டார்; அதேபோன்று, உணவை வீணாக்கவும் சம்மதிக்க மாட்டார். நாங்கள் சாப்பிடும் போது, உணவை வீணாக்கினால், அவருடைய, மிக பிரபலமான, பசி பாட்டான, 'உம்பாயி குச்சாண்டி... பிராணன் போகுதம்மா...' என்ற பாடலை, கண்ணில் நீர் வழிய பாடுவார்.'அப்பா உயிருடன் இருந்த போது, நானும், அம்மாவும் அசைவ உணவு வகைகளை சாப்பிட்டு வந்தோம்; அவர் மறைவு, எங்களை மாற்றி விட்டதால், இப்போது, சைவ உணவுக்கு மாறி விட்டோம்...' என்கிறார்.— ஜோல்னாபையன்.