உள்ளூர் செய்திகள்

கழுதைப் பந்தயம்!

இத்தாலியிலுள்ள, டோரிட்டா டிசியன்னா நகரில் நடக்கும் கழுதைகளுக்கான ஓட்டப் பந்தயம் மிகவும் பிரபலம். இந்த நகரில், மரத் தச்சர்கள் அதிகம். இந்த மரத் தச்சர்களின் கடவுளாக, செயின்ட் ஜோசப் கருதப்படுகிறார். மார்ச் 24ம் தேதியை செயின்ட் ஜோசப் தினமாக கொண்டாடுகின்றனர். அன்று, கழுதையின் மீது அமர்ந்து, அதை ஓட்டிச் சென்று, வெற்றி பெற வேண்டும். இத்தாலியிலுள்ள ஏவல் மைதானத்தில், 200 மீட்டர் தூரத்தை, கழுதை வலம் வந்து ஜெயிக்க வேண்டும். இதைப் போல, பந்தய ஓட்டத்தில், நாலு சுற்றும் ஓடி வெற்றி பெரும் கழுதையே பரிசு பெறும். இந்த கழுதைகளைப் பொறுத்தவரை ஒரு பிரச்னை... இவை நினைத்தால் தான் ஓடும். இல்லாவிட்டால், நின்று மக்கர் செய்யும். பக்கவாட்டில் திரும்பி ஓடி மானத்தை வாங்கும். இந்த அபத்த செயல்கள் தான், இந்த ரேசின் சிறப்பு. இந்த கழுதை ஓட்டப் பந்தயத்தை பார்க்க பெரும் கூட்டம் கூடிவிடும்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !