ஷங்கரை மிரட்டிய கமல்!
ரஜினி-ஐஸ்வர்யாராய் நடித்த, எந்திரன் படம் தான், இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களிலேயே, அதிக பட்ஜெட் படம் என்ற பட்டியலில் இருந்தது. ஆனால், ஐ படத்தை, 90 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வந்த டைரக்டர் ஷங்கர், கமலின், விஸ்வரூபம் படத்தின் பிரமாண்டத்தைப் பார்த்து மிரண்டு போய், ஐ படத்தின் பட்ஜெட்டை, 145 கோடியாக்கி, இன்னும் பிரமாண்டத்தை அதிகப்படுத்தியுள்ளார்.—
சினிமா பொன்னையாஅசினுக்கு புதிய சிக்கல்!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் அசின், தன்னிடம் எந்த கம்பெனி கால்ஷீட் கேட்டாலும், சல்மான்கானிடம் ஒப்புதல் பெற்ற பின்தான், அந்த படத்தில் நடிக்க முடிவு செய்கிறார். ஆனால், இப்படி இன்னொரு நடிகரின் கட்டுப்பாட்டில் அசின் இருப்பதை அறிந்த சில மேல்தட்டு ஹீரோக்கள், அவர் மீது அதிருப்தி அடைந்திருப்பதோடு, தங்கள் படங்களுக்கு அசின் தேவையில்லை என்றும் வெளிப்படையாக கூறுகின்றனர். தேடி அழைத்த விருந்துக்கு வாடி இருந்தது போல! —
எலீசாவிஜய் படத்தில் வினய்!
மிரட்டல் படத்தை தொடர்ந்து, ஒன்பதுல குரு, இருவர் உள்ளம் படங்களில் நடித்து வரும் வினய், தற்போது விஜய் நடித்து வரும், தலைவா படத்தில், ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார். காரணம் கேட்டால், 'விஜய் எனக்கு பிடித்தமான நடிகர். அதனால், அவருடன் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்தது. அதனால் தான், இந்த வாய்ப்பை நானே கேட்டு வாங்கி நடிக்கிறேன்...' என்கிறார் வினய்.—
சி.பொ.,படிப்பை தொடரும் காயத்ரி!
18 வயது, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் நடித்த காயத்ரிக்கு, அடுத்து கைவசம், பொன்மாலை பொழுது, மத்தாப்பூ போன்ற படங்கள் உள்ளன. ஆனால், இந்த இரண்டுமே புதுமுக ஹீரோக்கள் படங்கள் என்பதால், அப்படங்களின் மீது அவருக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. மேலும், அடுத்து புதிய படங்களும், 'புக்'காகவில்லை என்பதால், பெங்களூரு சென்று படிப்பை விட்ட இடத்திலிருந்து, தொடரப் போவதாக கூறுகிறார்.—
எலீசாதங்கை நடிகையின் கதாநாயகி கனவு!
அலெக்ஸ் பாண்டியன் படத்தில், சந்தானத்தின் மூன்று தங்கைகளில் ஒருவராக நடித்தவர் அகான்ஷா பூரி, மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரான இவருக்கு, கார்த்தியுடன் டூயட் பாட வேண்டும் என்பது லட்சியமாகவே இருந்ததாம். அந்த நேரம் பார்த்து, தங்கை வேடத்துக்கு கேட்க, வந்த வாய்ப்பை, விட மனசில்லாமல் நடித்துள்ளார். இருப்பினும், 'டூயட் பாட வேண்டும் என்ற ஆசையை, விரைவில் நிறைவேற்றுவதற்காக முயற்சி எடுப்பேன்...' என்கிறார் அகான்ஷா பூரி. விதி எப்படியோ, மதி அப்படி!—
எலீசாதொழிலதிபருக்கு தடைபோட்ட ஓவியா!
ஓவியாவை திருமணம் செய்துகொள்ள, ஒரு தொழிலதிபர் தொடர்ந்து துரத்தி வருகிறார். ஆனால், ஓவியாவோ, 'சினிமாவில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் வந்தேன். ஆனால், நான் கணக்கு போட்டதில், பத்து சதவீதம் மட்டுமே சம்பாதிக்கிறேன். அதனால், இன்னும் ஒரு பெருந்தொகையை சினிமாவில் சம்பாதித்த பின், திருமணம் செய்து கொள்வேன்...' என்று, தொழிலதிபரின் ஆசைக்கு தற்காலிக தடை போட்டு வைத்துள்ளார் ஓவியா. தெற்கத்திக் குருவியை வடக்கத்திக்குருவி தெற்றி அழைத்ததாம், சீசம் பழம் தின்னம் போக!—
எலீசாஇயக்குனர் ருத்ரன் மீது புகார்!
பாலா இயக்கிய, சேது படத்தைப் போன்று, இயக்குனர் ருத்ரன் இயக்கியுள்ள, வெற்றிச் செல்வன் படத்திலும், மனநோயாளிகளின் மருத்துவமனையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது, அவர் நிஜ மன நோயாளிகளை வைத்தே படமாக்கியதாக சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ருத்ரன், 'மனநிலை பாதிக்கப்பட்டவர்களை வைத்து எப்படி காட்சியமைக்க முடியும்' என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.—
சினிமா பொன்னையாஅவ்ளோதான்