உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

சிவாஜி கெட்டப்பில் சசிகுமார்!தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார் மற்றும் வரலட்சுமி இருவருக்கும் சில மாதங்களாக கரகாட்ட பயிற்சி கொடுத்து, தற்போது படப்பிடிப்பை தஞ்சாவூரில் துவங்கியிருக்கிறார் பாலா. முதல்கட்டமாக கரகாட்டம் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை படமாக்கியவர், அடுத்து, சசிகுமார் நாதஸ்வர வித்வான் கதாபாத்திரத்தில் நடிப்பதால், அவர் நாதஸ்வரம் வாசிப்பது போலவும் படமாக்குகிறார். அதனால், கரகாட்டமாடவே கடும் பயிற்சி எடுத்து வந்த சசிகுமாருக்கு, இப்போது இடையிடையே நாதஸ்வரம் வாசிக்கும் பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால், தினமும் படப்பிடிப்பு முடிந்ததும், சில மணி நேரங்கள் ஒரு வித்வானிடம் நாதஸ்வரம் வாசிக்க பயிற்சி எடுக்கும் சசிகுமாரை, தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி கணேசன் நாதஸ்வரம் வாசித்தது போன்று பெரிய அளவில் காண்பிக்கவும் திட்டமிட்டிருக்கிறார் பாலா.— சினிமா பொன்னையாஅனிருத்தை டென்ஷன் செய்த ரசிகர்கள்!மான் கராத்தே மற்றும் கத்தி படங்களில் அனிருத்தின் இசையை கொண்டாடி வந்த இணையதள ரசிகர்கள், தற்போது, அவரது இசையில் வெளியாகியுள்ள காக்கி சட்டை படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒரு ஹாலிவுட் படத்தின் ஆல்பத்தில் இருந்து சுட்டவை என்று விமர்சனம் செய்து வருகின்றனர். அத்துடன், அந்த ஆல்பத்தையும் இணையதளத்தில் வெளியிட்டு அனிருத்தை டென்ஷன் செய்து விட்டுள்ளனர். ஆனால், அதற்கு இதுவரை எந்த பதிலும் கொடுக்காத அனிருத், 'இது என் வளர்ச்சியை தடுக்க சில இசையமைப்பாளர்கள் செய்யும் சதி வேலை தான்...' என்று தன் அபிமானிகளிடத்தில் கூறி வருகிறார். அதோடு, இதற்காக அவர்களை எப்படியேனும் பழி வாங்கியே தீருவது என்ற முடிவில் இறங்கியுள்ள அனிருத், தன் போட்டி இசையமைப்பாளர்கள் எந்தெந்த ஆல்பங்களில் இருந்து டியூன்களை திருடியிருக்கின்றனர் என்பதை, ஆராயும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.— சினிமா பொன்னையாஜெயம் ரவியின் நண்பியான அஞ்சலி!அங்காடித்தெரு அஞ்சலிக்கு, கோலிவுட்டில் மறுபடியும் பிரகாசிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அளவுக்கதிகமாகி விட்டது. அதனால், ஐதராபாத்துக்கு தன் பரிவாரங்களை மாற்றியிருந்த அவர், மறுபடியும் கோடம்பாக்கத்துக்கு இடம்பெயர முயற்சிக்கிறார். தற்போது, அப்பாடக்கர் படத்தில் நடிப்பவர், அப்பட நாயகன் ஜெயம் ரவியுடன் நட்பு வளர்க்கிறார். இதே படத்தில் இன்னொரு நாயகியாக த்ரிஷா இருந்தபோதும், அஞ்சலி காட்டும் அந்நியோன்யத்தால் அவரிடமே படப்பிடிப்பு தளத்தில், அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி. இந்த நட்பை பயன்படுத்தி, அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், தனக்கு ஹீரோயினி சான்ஸ் கேட்டு, அதே இடத்தில் ஒப்பந்தம் போடுகிறார் நடிகை. இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!— எலீசாகூத்துப்பட்டறையில் மனீஷா யாதவ்!வழக்கு எண், ஆதலால் காதல் செய்வீர் மற்றும் ஜன்னல் ஓரம் உட்பட சில படங்களில் நடித்தவர் மனீஷா யாதவ். முதலில் அடக்கி வாசித்த இவர், பின் கவர்ச்சிகரமாகவும் தன் நடிப்பை மாற்றிக் கொண்டார். அதேசமயம், சில முன்னணி இயக்குனர்களிடம், அவர் சான்ஸ் கேட்டு சென்றபோது, 'உன்னுடைய நடிப்பில் போதுமான திருப்தி இல்லை...' என்று கூறினர். விளைவு, கூத்துப்பட்டறையில் சேர்ந்து, சில மாதங்களாக நடிப்பு பயிற்சி பெற்று, மீண்டும் அதே இயக்குனர்களை முற்றுகையிட்டு வருகிறார் மனீஷா. அதோடு, தான் அழுத்தமான நடிப்பை கொடுத்து, படமாக்கப்பட்ட 'சிடி'க்களையும், அவர்களின் பார்வைக்கு அனுப்பி விட்டுள்ளார். ஆகும் காலம் வந்தால், தேங்காகாய்க்கு இளநீர் போல் சேரும்!— எலீசாகறுப்புப் பூனை! * மங்காத்தா இயக்குனரின் படத்தில், தனக்கு துக்கடா வேடம் என்று ஒப்பந்தமான பின், அப்படத்திலிருந்தே வெளியேறிய, ஐ நடிகை, அந்த படத்திலிருந்து வெளியேறியதற்கு, ஐ பட நடிகர்தான் காரணம் என்கின்றனர். ஒரு பிரமாண்டமான படத்தில் நடித்த பின், இப்படி துக்கடா வேடத்தில் நடித்தால், 'இமேஜ்' போய் விடும் என்று அவர்தான் அம்மணி மீது கரிசனம் கொண்டு, 'அட்வைஸ்' செய்துள்ளார். அதன்பின் எடக்குமடக்காக பேசி வெளியேறினார் நடிகை. இதனால், மேற்படி படத்தின் இயக்குனர், சீயான் மீது செம, 'காண்டில்' உள்ளார்.* தன் மகன் அந்த பிரியமான நடிகை யின், பிரியத்தில் ஐக்கியமாகி கிடப்பதை கேள்விப்பட்ட நவரச நடிகர், திடீர் திடீரென்று ஸ்பாட்டுக்கு விசிட் அடித்து, மகனை எச்சரித்து வந்தார். ஆனால், அது வேலைக்கு ஆகவில்லை. இப்போதெல்லாம், ஒருநாள் தனக்கு லீவு கிடைத்தாலும், நடிகையின் பாச வலைக்குள் தேடிச்சென்று சிக்கிக் கொள்கிறார் மகன் நடிகர். இதனால், இப்போது மகனை எச்சரிப்பதை விடுத்து, மேற்படி நடிகையை, தன் அடியாட்கள் மூலம் எச்சரித்து வருகிறார் தந்தைகுலம். ***துளிகள்!* நள்ளிரவு பார்ட்டிகளுக்கு சென்றால், தான் படித்த செக்ஸ் ஜோக்ஸ்களை சொல்லி, கூடியிருக்கும் இளவட்ட நடிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் ப்ரியாஆனந்த்.* ஐ படத்திற்கு பின், தமிழில் தான் எதிர்பார்த்தபடி படங்கள் இல்லாததால், இந்தியில் நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறார் எமிஜாக்சன்.* மெல்லிசை என்ற படத்தில் இசையமைப்பாளர் வேடத்தில் நடிக்கிறார் விஜயசேதுபதி.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !