இதப்படிங்க முதல்ல...
ரஜினியுடன் நடிக்க கமல் மறுப்பு!16 வயதினிலே, மூன்று முடிச்சு மற்றும் நினைத்தாலே இனிக்கும் என, பல படங்களில் கமல் மற்றும் ரஜினி இணைந்து நடித்தனர். அதன்பின், எந்தப்படத்திலும் இணையாத அவர்களை, மீண்டும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார் இயக்குனர் ஷங்கர். ஆனால், அப்படத்தில் ரஜினியை கதாநாயகனாகவும், கமலை வில்லனாகவும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு, யோசித்து பதில் கூறுவதாக கூறிய கமல், பின், 'அது இப்போதைய சூழ்நிலையில் சாத்தியப்படாது...' என்று மறுத்து விட்டார். அதனால், அப்படத்தில் வேறு நடிகரை, வில்லனாக நடிக்க வைக்க, முடிவு செய்திருக்கிறார் ஷங்கர். — சினிமா பொன்னையாமஞ்சுவாரியரை மகிழ வைத்த மம்முட்டி!மலையாளத்தில், ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை அடுத்து, மம்முட்டியுடன் இணைந்து, என்னும் எப்பொழுதும் என்ற படத்தில் நடித்துள்ளார் மஞ்சுவாரியார். இப்படத்தில், மிக மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள மஞ்சுவாரியார், நடனத்தில் ஷோபனாவையே மிஞ்சும் அளவுக்கு ஆடியிருக்கிறார். அதனால், 'மஞ்சுவாரியாரின் இரண்டாவது ரவுண்டு மிகப் பெரிய அளவில் இருக்கும்...' என்ற கருத்து கூறியிருக்கும் மம்முட்டி, 'இப்படத்தில் அவரது நடிப்புக்கு தேசிய விருதுகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது...' என்று கூறியுள்ளார். மம்முட்டியின் இக்கருத்து, மஞ்சுவாரியாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.— எலீசாகார்த்திக்ராஜாவின் இசை நிகழ்ச்சி!இதுவரை வெளிநாடுகளில், பிரமாண்ட இசைக்கச்சேரிகளை நடத்தி வந்த கார்த்திக்ராஜா, கடந்த ஆண்டு, தன் தந்தை இளையராஜாவுக்கு மரியாதை செய்யும் வகையில், அவரது பாடல்களை மட்டும் பாடி, ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியை மதுரையில் நடத்தினார். அதைத் தொடர்ந்து, கோவையில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ள கார்த்திக்ராஜா, தற்போது, அதற்கான முதல்கட்ட வேலையாக பாடல்களுக்கான ரிகர்சலில் ஈடுபட்டுள்ளார்.— சி.பொ.,போலீஸ் வேடத்தில் நதியா!திருமணத்துக்குப்பின் செலக்டீவான படங்களில் மட்டுமே நடித்து வரும் நதியா, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி மற்றும் சண்ட படங்களுக்குப்பின், மலையாளத்தில் தான் அதிகமாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது தமிழில் இனியா நடித்து வரும், இனி வரும் நாட்கள் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். காட்டுக்குள் மாயமான பெண்களை கண்டுபிடிப்பதற்கான வேடத்தில் நடித்திருக்கும் நதியா, முதன்முறையாக இப்படத்தில் சண்டை காட்சிகளிலும் நடித்திருக்கிறார். காலம் அல்லாத காலத்தில் காய்த்ததாம் பேய் சுரைக்காய்!— எலீசாஹிருத்திக் ரோஷனை இயக்கும் முருகதாஸ்!தமிழில் வெளியான, மவுனகுரு என்ற படத்தை, தற்போது இந்தியில், அகிரா என்ற பெயரில், ரீ - மேக் செய்து வருகிறார், ஏ.ஆர்.முருகதாஸ்.இப்படத்தை அடுத்து, ஹிருத்திக் ரோஷனை வைத்து, இந்தியில் ஒரு பிரமாண்ட படம் இயக்குகிறார் முருகதாஸ். அப்படத்தில் நடிக்க, பல இந்தி நடிகைகள் போட்டி போட்ட போதும், அவர்களை தவிர்த்து, ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளார். ஆக, சமீபகாலமாக தமிழ், தெலுங்கு என்று கூடுதல் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், ஹிருத்திக் ரோஷனின், மெகா படத்தில் ஒப்பந்தமாகி, பாலிவுட் நடிகைகளுக்கு, மீண்டும், 'ஷாக்' கொடுத்திருக்கிறார்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!பையா நடிகையுடன், கொம்பன் நடிகரை ஜோடி சேர்க்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இவ்விஷயம் நடிகரின் தந்தை குலத்துக்கு தெரிய வந்த போது, செம டென்ஷனாகி, மேற்படி நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர, மகனுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.விஜய் நடித்து வரும், புலி படத்தின் கிளைமாக்சில், அரசர் காலத்து படங்களில் பேசுவது போன்ற தூய தமிழில் பேசி நடித்துள்ளனர்.சினி துளிகள்!* பாண்டிராஜ் இயக்கும், ஹைகூ படத்தில், பிந்துமாதவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.* விஷ்ணுவர்த்தனின், ஆரம்பம் படத்தில், அஜீத்துடன் இணைந்த நயன்தாரா, மீண்டும் விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத்துடன் இணைகிறார்.* ஆர்யாவுடன் நடிக்கும், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில், காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தமன்னா.* சந்தானம் நடிக்கும், இனிமேல் இப்படித்தான் படத்தில், கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுத்துள்ளார் ஆஷ்னா சவேரி.அவ்ளோதான்!