இதப்படிங்க முதல்ல...
மோகன்லால் - மம்முட்டி இணையும், 56வது படம்!மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால் - மம்முட்டி இருவருக்குமிடையே தொழில் போட்டி இருந்த போதும், இருவரும், இதுவரை, 55 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மோகன்லால் படத்தில் மம்முட்டியும், மம்முட்டி படத்தில் மோகன்லாலும் கெஸ்ட் ரோலில் நடிப்பது, வெகு சாதாரணமான விஷயம். இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், டுவன்டி 20 என்ற படத்தில், இருவருமே சம அளவு கதாபாத்திரத்தில் இணைந்து நடித்தனர். அதையடுத்து, தற்போது, மம்முட்டி நாயகனாக நடிக்கும், கடல் கடந்து ஒரு மாத்துக்குட்டி என்ற படத்தில், நடிகர் மோகன்லாலாக நடிக்கிறார் மோகன்லால். இது, அவர்கள் இணைந்து நடிக்கும், 56வது படம்!— சினிமா பொன்னையாஷெரீனை சுற்றிவரும் காமெடியன்கள்!நண்பேன்டா படத்தில், சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ள ஷெரீனை, முழு நேர காமெடி நடிகையாக்க, சூரி உள்ளிட்ட சில காமெடியன்கள், அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அடுத்து, திகில் என்ற படத்தில் நடித்து வரும் ஷெரின், இப்படம் வெற்றி பெற்றால் மீண்டும் தன் கதாநாயகி மார்க்கெட் சூடு பிடித்து விடும் என நம்பி வருவதால், காமெடியன்களுக்கு பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார். ஆனாலும், ஒருவேளை திகில் படம் கவிழ்த்து விட்டால், அவர்களை சார்ந்து தான் பிழைக்க வேண்டும் என்பதால், 'இன்னும் சில மாதங்களுக்கு பின் பதில் சொல்கிறேன்...' என்று இழுத்தடித்து வருகிறார். ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்கு போடு!— எலீசாமுதலிடம் பிடித்த அஜித் - எமிஜாக்சன்!மும்பையில் இருந்து வெளியாகும், 'இன்டியன் மூவீஸ் டாட் காம்' என்ற இணையதளம், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தமான நடிகர் நடிகைகள் யார் யார் என்பதை அறிய, வாக்குகள் பெற்று தரவாரியாக பட்டியல் வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மாலிவுட் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கோலிவுட் நடிகர்களில் அஜீத் பெருவாரியான வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை விஜய்யும், மூன்றாவது இடத்தை சூர்யாவும் பிடித்துள்ளனர். நடிகைகளில் ஐ பட நாயகி எமிஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த வருடம் முதலிடம் பிடித்த ஸ்ருதிஹாசன் இரண்டாம் இடத்தையும், சமந்தா மூன்றாவது இடத்தையும், தமன்னா நான்காவது இடத்தையும், ஹன்சிகா ஐந்தாவது இடத்தையும், அனுஷ்கா ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு ஒன்பதாவது இடத்தில் இருந்த நயன்தாரா இந்த ஆண்டு ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.— சி.பொ.,பெப்சிக்கு போட்டியாக சங்கம் துவங்கிய மன்சூரலிகான்!நடிகர் மன்சூரலிகான் தற்போது, அதிரடி என்ற படத்தை தயாரித்து, நடித்து வருகிறார். இப்படத்தில், அவர் பெப்சி அமைப்பில் இல்லாத தொழிலாளர்களை வைத்து வேலை செய்ததாக, பெப்சி அமைப்பு, அவருக்கு, 'ரெட் கார்டு' போட்டது. இதை எதிர்த்து மன்சூரலிகான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது, 'யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம்...' என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, பெப்சி அமைப்பில் இல்லாதவர்களை வைத்து, அதிரடியாக படப்பிடிப்பை நடத்தி வரும் மன்சூரலிகான், பெப்சிக்கு எதிராக, 'தமிழ்நாடு திரைப்பட படைப்பாளிகள் ஒருங்கிணைந்த இந்திய கூட்டமைப்பு' என்றொரு சினிமா தொழிலாளர் அமைப்பை துவங்கியிருக்கிறார். இதில், 2,000 ரூபாய் கொடுத்தால், உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!பீட்சா நடிகருடன் நடித்த நான்கெழுத்து நடிகைக்கு, இப்போது படமே இல்லை. அதனால், இதுவரை, 'போர்த்தியபடி தான் நடிப்பேன்...' என்று கண்டிஷன் போட்டு வந்த நடிகை, தற்போது, கண்டிஷனை துாக்கி எறிந்து, கவர்ச்சியாக நடிக்க தயாராகி விட்டதாக அறிவித்துள்ளார். அத்துடன், தான் துக்கடா டிரெஸ்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சுற்றலில் விட்டு, நரைமுடி தயாரிப்பாளர்களை சிலிர்க்க வைத்து வருகிறார்.நடிகர்கள் சிலர் பாடுவதை தொடர்ந்து, ஜெயமான நடிகருக்கும், பின்னணி பாட ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால், தற்போது, தான் நடித்துள்ள ஒரு படத்தில், 'பல்பு...' என்று துவங்கும் பாடலை பாடியுள்ளார். சங்கீத ஞானமே இல்லாத மேற்படி நடிகரை பாட வைக்க, பெரும்பாடு பட்டு விட்டார் படத்தின் இசையமைப்பாளர். ஒவ்வொரு வரியையும் அவர் ஒவ்வொரு ஸ்ருதியில் பாட, ஒரே பாடலையே பல நாட்களாக நடிகரை பாட வைத்து, பிட்டு பிட்டாக பதிவு செய்திருக்கிறார். இருப்பினும், 'நானும் சூப்பர் சிங்கராயிட்டேன்...' என்று காலரை தூக்கி விட்டு திரிகிறார் மேற்படி நடிகர்.சினி துளிகள்!* விஜயசேதுபதியுடன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த காயத்ரி, இப்போது, மெல்லிசை படத்தில் நடித்துள்ளார்.* ரோமியோ ஜூலியட்டைப் போன்று அப்பாடக்கர் படத்திலும், ஜெயம் ரவிக்கு இரண்டு கதாநாயகிகள்.