இதப்படிங்க முதல்ல...
இந்திக்கு செல்லும், ரெமோ!சிவகார்த்திகேயன் நடித்த, ரெமோ படம், தமிழில் வெற்றி பெற்றதை அடுத்து, தெலுங்கில், 'டப்' செய்து, வெளியிட்டனர். அங்கும், படத்திற்கு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, தற்போது, இந்தியில், அப்படத்தை ரீ - மேக் செய்யும் முயற்சி நடக்கிறது. இப்படத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா அல்லது இந்தி நடிகர் யாரேனும் நடிக்கின்றனரா என்பதை, ரகசியமாக வைத்துள்ளனர்.— சினிமா பொன்னையான்உண்மையான வயதை கூறிய இலியானா!பெரும்பாலும், நடிகைகள், தங்களது வயதை வெளிப்படையாக கூறுவதில்லை. ஆனால், சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய இலியானா, 'இது, என், 30வது பிறந்த நாள்...' என்று, வெளிப்படையாக அறிவித்தார். அத்துடன், 'உண்மையான வயதை கூறுவதில், எனக்கு எந்த தயக்கமும் இல்லை; மேலும், 40 வயதானாலும், நான், இதே இளமையுடன், அப்படியே இருப்பேன்...' என்றும் கூறியுள்ளார். இன்னும் இருக்கிறது தேருக்குள் சிங்காரம்!— எலீசாசக நடிகைகளிடம் பாராட்டு பெற்ற ஸ்ருதிஹாசன்!தெலுங்கு படங்களில், ஆடைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுத்து நடித்து, அடிக்கடி, சர்ச்சைகளில் சிக்கி வந்த ஸ்ருதிஹாசன், சமீபத்தில் வெளியான, பிரேமம் படத்தில், டீச்சர் வேடத்தில் நடித்து, நல்ல பெயரை சம்பாதித்துள்ளார். அதையடுத்து, அவர் நடிப்பில் வெளியான, பிட்ச் என்ற குறும்படம், அவருக்கு இன்னும், நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. அப்படத்தை பார்த்த, காஜல் அகர்வால் மற்றும் தமன்னா உள்ளிட்ட சக நடிகைகளே, ஸ்ருதியின் நடிப்பை பாராட்டியுள்ளனர். ஒன்றை பெற்றாலும் கடுகப் பெறு!— எலீசாகாஜல் அகர்வாலை, 'பீல்' செய்ய வைத்த, மெகா நடிகர்!சிரஞ்சீவி நடித்து வரும், கைதி நம்பர் - 150 படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க, சில நடிகைகள் மறுத்த நிலையில், காஜல் அகர்வால் தைரியமாக நடித்தார். ஆனால், அப்படத்தில், இரண்டு வேடங்களில் நடிக்கும் சிரஞ்சீவியை சுற்றியே, மொத்த கதையும் இருப்பதோடு, ஒரு குத்துப்பாடலுக்கும், ராய் லட்சுமியை, ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால், காஜலுக்கு, கதையில் பெரிய பங்கு இல்லை. இதனால், 'பெரிய நடிகர் படம் என்று ஆசைப்பட்டு நடித்த என்னை, இப்படி, 'டம்மி' ஆக்கி விட்டனரே..' என்று, புலம்பி வருகிறார். வேலைக்கு தகுந்த வேஷம்!— எலீசாமீண்டும் வில்லனாக பாபி சிம்ஹா!நேரம் மற்றும் ஜிகர்தண்டா படங்களில், வில்லனாக நடித்து, புகழ் பெற்ற, பாபி சிம்ஹா, பின், கதாநாயகனாகி விட்டார். ஆனால், அவர் கதாநாயகனாக நடித்த படங்கள், வெற்றியை கொடுக்காததால், தற்போது, சுசிகணேசன் இயக்கத்தில், திருட்டுப்பயலே இரண்டாம் பாகத்தில், 'நெகடீவ்' கதாநாயகனாக நடிக்கிறார். இதையடுத்து, இறைவி படத்திற்கு பின், மீண்டும், விஜயசேதுபதியுடன், ஒரு படத்தில் நடிக்கும், பாபி சிம்ஹா, அப்படத்தில், மீண்டும் வில்லனாக அரிதாரம் பூசுகிறார்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!பாகுபலி படத்தை மிஞ்சும் வகையில், 350 கோடி ரூபாயில், சரித்திர படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்ட, முத்தின கத்தரிக்காய் நடிகருக்கு, அவர் எதிர்பார்த்த கதாநாயகர்கள் யாரும், 'கால்ஷீட்' கொடுக்கவில்லை. இதனால், பல மாதங்களாக முயற்சித்து வந்த நடிகர், தற்போது, அப்பட முயற்சியை, கிடப்பில் போட்டு, தன் பாணியில், 'காமெடி' படம் இயக்கும் முடிவுக்கு திரும்பியுள்ளார்.வாகை சூடவா பட நடிகைக்கு, சமீபகாலமாக, சரியான பட வாய்ப்புகள் இல்லாததால், சில மேல் தட்டு சினிமா புள்ளிகளுடன், ரகசிய சந்திப்பு நடத்தி போதையில் மூழ்குகிறார். இப்படி, அடிக்கடி சந்திப்புகள் நடப்பதால், 'டயட்'டை மறந்த நடிகை, உடல் பெருத்து காணப்படுகிறார். அதனால், வாய்ப்பு தருவதாக, வாக்குறுதி அளித்தவர்கள், தற்போது, அம்மணியின் உடல் பெருத்திருப்பதை காரணம் காட்டி, 'ஆன்ட்டி' வேடம் தருவதாக கூறுகின்றனர். இதனால், செம அதிர்ச்சியில் இருக்கிறார் நடிகை.சினி துளிகள்!* அரண்மனை படத்துக்காக, தான் போட்ட, அரண்மனை பட, 'செட்'டை, தன் மனைவி குஷ்பு தயாரிக்கும், சரித்திர சீரியலுக்கு கொடுத்துள்ளார், இயக்குனர் சுந்தர்.சி.* எமிஜாக்சனுக்கு, 'டப்பிங்' குரல் கொடுத்து வரும், ரவீணா ரவி, விதார்த் நடித்து வரும், ஒரு கிடாவின் கருணை மனு படத்தில் நாயகியாக நடிக்கிறார்.* ஆர்யாவுடன் நடித்துள்ள, கடம்பன் படம் தனக்கு, தமிழில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று, எதிர்பார்க்கிறார் கேத்ரின் தெரசா.அவ்ளோதான்!