இதப்படிங்க முதல்ல...
வேலு நாச்சியார் நாடகத்தை திரைப்படமாக்கும் வைகோ!பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர், வீரமங்கை வேலு நாச்சியார். அவரது பெயரில் தொடர்ந்து தமிழகத்தில் நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நாடகத்தை தன், 'கண்ணகி பிலிம்ஸ்' சார்பில், திரைப்படமாக தயாரிக்கப் போவதாக சொல்கிறார், ம.தி.மு.க., தலைவர் வைகோ. அதுபற்றி அவர் கூறும்போது, 'இந்நாடகத்தில் வேலு நாச்சியாரும், ஹைதர் அலியும் சந்திக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. அதனால், இந்நாடகத்தை திரைப்படமாக்கினால், அது, இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்...' என்று கூறுபவர், 'இது என்னுடைய கனவு படம்...' என்கிறார்.— சினிமா பொன்னையாநடிகர் கிருஷ்ணாவின் வில்லன் அவதாரம்!நடிகர் அர்ஜுன் நடித்த, நிபுணன் படத்தில் வில்லனாக நடித்த, கழுகு கிருஷ்ணா, தற்போது, தனுஷ் நடிக்கும், மாரி - 2 படத்திலும் வில்லனாக நடிக்கிறார். தான் நாயகனாக நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததன் காரணமாக, வில்லன் அவதாரம் எடுத்துள்ள கிருஷ்ணா, தொடர்ந்து வித்தியாசமான வில்லன் வேடங்களில் நடிப்பதற்கு தயாராகிறார்.— சி.பொ.,பிட்டு பட நடிகரான கவுதம் கார்த்திக்!இயக்குனர் மணிரத்னத்தின், கடல் படத்தில் அறிமுகமானவர், நடிகர் கார்த்திக்கின் மகன், கவுதம் கார்த்திக். அதையடுத்து தொடர்ந்து காதல் கதைகளாக நடித்து வந்தவர், ஹர ஹர மகாதேவகி என்ற ஆபாச கதையில் நடித்தவர், மீண்டும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஆபாச படத்தில் நடிக்கிறார். இதனால், கோலிவுட்டில் அனைவரும் அவரை, 'பிட்டு பட' நடிகர் என்று அழைக்கத் துவங்கியிருப்பதோடு, ஆபாச கதைகள் வைத்திருக்கும் மேலும் சில இயக்குனர்களும் கவுதம் கார்த்திக்கை அணுகுகின்றனர்.— சி.பொ.,இயக்குனர் மகேந்திரன் வைத்த தலைப்பு!மலையாளத்தில் வெளியான, மகேஷின்டே பிரதிகாரம் என்ற படத்தை, தமிழில் உதயநிதியை வைத்து ரீமேக் செய்துள்ளார், பிரியதர்ஷன். விஜய்யின், தெறி படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர், மகேந்திரன், இப்படத்தில், அப்பா வேடத்தில் நடித்துள்ளார். அத்துடன், கதைக்கு பொருத்தமான டைட்டில் வைக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டதை அடுத்து, நிமிர் என்ற தலைப்பை இப்படத்திற்கு சூட்டியுள்ளார், மகேந்திரன்.— சி.பொ.,நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரஜினி - கமல்!நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதால், அதற்கான நிதிக்காக, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், சில காலத்திற்கு முன், சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்நிலையில், அடுத்தபடியாக, ஜனவரி, 2018ல் மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில், தமிழ் திரையுலகினர் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில், ரஜினி, கமல் ஆகியோரும் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.— சினிமா பொன்னையாகறுப்புப் பூனை!தன் படங்களில் அரசியல் பஞ்ச் டயலாக்குகளை, ஆவேசமாக பேசி வந்த உச்ச நடிகர், பின், அதை தவிர்த்திருந்தார். ஆனால், தற்போது தான் நடித்து வரும், இரண்டெழுத்து படத்தில், சீன் பை சீன் அரசியலை, 'அட்டாக்' செய்கிறார். அதனால், இந்த படம் ரிலீசாகும்போது, சர்ச்சைகளை உருவாக்கும் என்கின்றனர்!கோலிவுட்டில் டேரா போடத் துவங்கியுள்ளார், ஸ்பைடர் நடிகை. அவர் நடிக்கும் படங்களுக்கு தெலுங்கில் வரவேற்பு இருப்பதால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், அவருக்கு பட வாய்ப்புகள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து, கோலிவுட் முன்னணி நடிகையர் நடிக்கும் சில முக்கிய படங்களை குறி வைக்கிறார், ஸ்பைடர் நடிகை. இதனால், திரைக்குப் பின், சில மேல்தட்டு நடிகைகளுக்கிடையே குடுமிப்புடி சண்டை ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.சினி துளிகள்!* முன்வரிசை நடிகர்களுடன் தான் நடிப்பேன் என்ற கருத்தை மாற்றி, நல்ல கதைகள் என்றால் பிரபலமில்லாத நடிகர்களுடனும் நடிப்பேன் என்கிறார், ராகுல் பிரீத் சிங். * தனுஷ் நடித்த, மாரி படத்திற்கு, அனிருத் இசையமைத்த நிலையில், தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு, இசையமைக்கிறார், யுவன் சங்கர் ராஜா.* காலா படப்பிடிப்பில் ரஜினியிடம் நடிப்பு கற்றுக் கொண்டதாக சொல்கிறார், அப்படத்தில் நாயகியாக நடிக்கும், இந்தி நடிகை, ஷுமா குரோஷி.அவ்ளோதான்!