இதப்படிங்க முதல்ல...
மூன்று சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் விஜயசேதுபதி!சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்தில், சிரஞ்சீவி மற்றும் அமிதாப்பச்சனுடன் நடித்து வருகிறார் விஜயசேதுபதி. இதையடுத்து தமிழில், காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும், கேங்ஸ்டர் படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார். இதன் மூலம், ஒரே நேரத்தில் மூன்று இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.- சினிமா பொன்னையாநியாயம் கேட்கும் ரகுல் பிரீத் சிங்!தன்னை சில இயக்குனர்கள் ஓரங்கட்டுவது பற்றி ரகுல் பிரீத் சிங் கூறும் போது, 'நான் நடிக்கும் படங்கள் தோல்வியடைந்து விட்டால், அந்த படத்தின் இயக்குனரோ, கதாநாயகரோ பின், என்னை அவர்களின் படங்களின் நடிக்க வைப்பதில்லை. ஒரு படத்தைப் பொறுத்தவரை, நான் வெறும் கதாநாயகி மட்டுமே, இயக்குனர் சொன்னபடி நடித்துக் கொடுக்கிறேன் அவ்வளவுதான். இதில், படங்களின் தோல்விக்கு நான் எப்படி காரணமாவேன். படங்களின் வெற்றி, தோல்விக்கு காரணகர்த்தா இயக்குனர் தானே...' என்கிறார். அம்பலத்தில் அவல் பொரி போல்!- எலீசாசரத்குமாரின் வில்லன் பிரவேசம்!விஜயகாந்த் நடித்த, புலன் விசாரணை படத்தில் வில்லனாக அறிமுகமானவர், சரத்குமார். அதன்பின், ஒரு கட்டத்தில் கதாநாயகனாகி விட்ட அவர், நீண்ட இடைவெளிக்குப்பின், அல்லு அர்ஜுன் நடித்த, என் பெயர் சூர்யா; என் வீடு இந்தியா என்ற படத்தில் மீண்டும் வில்லனாக நடித்தார். அதையடுத்து, தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிப்பதில் தான் ஆர்வமாக இருப்பதாக இயக்குனர்களிடம் கூறி வருகிறார்.- சி.பொ.,நடிகைகளை பாதுகாக்க உருவான புதிய அமைப்பு!சினிமாத்துறையில், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக சில நடிகைகள் பகிரங்கமாக கூறி வருகின்றனர். இதையடுத்து, தற்போது, நடிகைகளுக்கு பாதுகாப்புக் கொடுக்க, தென்னிந்திய திரைத்துறையில், 'பெண்கள் மையம்' என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. 'பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை தடுக்கும் நோக்கில் இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. நுாற்றாண்டு கண்ட சினிமாவில், அடுத்த தலைமுறை நடிகைகளுக்கான பாதுகாப்புக்கு அடித்தளம் இது...' என்கின்றனர், இந்த அமைப்பினர். இதில், கவுரவ ஆலோசகராக, நியமிக்கப்பட்டுள்ளார், நடிகை ரோகிணி.- எலீசாகறுப்பு பூனை!களவாணி நடிகை, பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது, தன்னை தேடி வந்த படங்களில் நடிக்க அதிகப் படியான சம்பளம் கேட்டதால், சில பெரிய படங்கள் பின்வாங்கி விட்டன. அதனால், இப்போது அடக்கி வாசித்து வரும் நடிகை, மீண்டும் டூ - பீஸ் கலாசாரத்தை கையில் எடுக்கப்போவதாக சொல்லி, கமர்ஷியல் பட தயாரிப்பாளர்களிடம் சான்ஸ் கேட்டு துரத்தி வருகிறார்.திருமணத்திற்கு பின், பாணா காத்தாடி நடிகைக்கு, குடும்பத்தார் கிடுக்கிப்பிடி போடுவதாக அவரை ஓரங்கட்டினர், தயாரிப்பாளர்கள். ஆனால், நடிகையோ, 'எனக்கு என் குடும்பத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லை; சினிமாவில் எப்படி வேண்டுமானலும் நடிக்கலாம்...' என்று முழு சுதந்திரம் கொடுத்துள்ளனர் எனச் சொல்லி, மீண்டும் படு கவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதம் சொல்லி, பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.அருந்ததி நடிகை, பாகுபலி நாயகனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியான செய்தியை இருவருமே மறுத்தனர். ஆனால், இப்போது கடைசியாக அவர், நான்கெழுத்து படத்தில் நடித்த மலையாள நடிகருடன் நெருங்கி பழகி வருவதாகவும், அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைய வாய்ப்பிருப் பதாகவும் தற்போது செய்திகள் கசிந்துள்ளன. சினி துளிகள்* காஞ்சனா 3 படத்தில், பேயாக நடித்து வருகிறார், ஓவியா.* ரங்கஸ்தலம் படத்திற்கு பின், நடிகை சமந்தா, சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்று வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.* சரித்திர படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாக சொல்கிறார் அனுஷ்கா.அவ்ளோதான்!