உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

ரஜினி, 'சென்டிமென்ட்!'தர்பார் படத்தில், அப்பா - மகள், 'சென்டிமென்ட்' கதையில் நடித்துள்ள, ரஜினி, தன், 168வது படத்தில், அண்ணன்- - தங்கை, 'சென்டிமென்ட்' கதையில் நடிக்க போகிறார். முக்கியமாக, கூட்டுக் குடும்பங்கள் மாறி தனிக்குடித்தனமாகி விட்ட நிலையில், உறவுகளின் முக்கியத்துவம் யாருக்கும் தெரிவதில்லை. அதனால், இந்த படத்தில், உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்லும் கதையில் நடிக்கிறார்.சினிமா பொன்னையாநிவேதா பெத்துராஜின் இரண்டு ஆசைகள்!டிக் டிக் டிக் படத்தில், நீச்சல் உடையில் நடித்து இளசுகளின் நெஞ்சை அள்ளியவர், நிவேதா பெத்துராஜ். கவர்ச்சி கன்னியான, 'ஹாலிவுட்' நடிகை, மர்லின் மன்றோவின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க வேண்டும் என்ற பெரிய ஆசை, இவருக்கு உள்ளதாம். அதேபோல், விஜயுடன், 'டூயட்' பாடும் ஆசையும், தனக்கு இருப்பதாக சொல்லும் நிவேதா, 'இந்த இரண்டு வாய்ப்புகளும் கிடைத்தால், சொக்க வைக்கும் கவர்ச்சிக் கவிதையாக என்னை வெளிப்படுத்துவேன்...' என்கிறார்.வருந்தி வருந்திப் பார்த்தாலும், வருகிறபோது தான் வரும்!— எலீசா'மீம்ஸ்'களுக்கு கவலைப்படாத, இந்துஜா!பிகில் படத்தில், 'விக்' வைத்து நடித்த, இந்துஜாவின் தோற்றத்தை கிண்டல் செய்து, சில ரசிகர்கள், 'சோஷியல் மீடியா'வில், 'மீம்ஸ்' வெளியிட்டு வருகின்றனர். ஆனால், அதைப் பார்த்த அவருக்கு, கொஞ்சம் கூட கோபம் வரவில்லை. 'பொது வாழ்க்கைக்கு வந்து விட்ட பின், விமர்சனங்கள் எழுவது சகஜம். அதனால், என்னைப் பற்றிய, 'மீம்ஸ்'களைப் பார்த்து வருத்தப் படாமல், நானும் அந்த படங்களைப் பார்த்து, 'என்ஜாய்' பண்ணுகிறேன்...' என்கிறார். காரியத்திலே கண் அல்லாமல், வீரியத்தில் இல்லை!— எலீசா'ஹீரோ'க்களை மிரட்டும், நந்திதா!நயன்தாரா மற்றும் த்ரிஷா பாணியில், அட்டகத்தி நந்திதாவும், கதையின் நாயகியாக களத்தில் இறங்கி விட்டார். ஆனால், அவர்களைப் போல் அல்லாமல், 'ஆக் ஷன்' வழியில் பயணிக்கும் அவர், சண்டை காட்சிகளில், 'ஹீரோ'க்களுக்கு இணையாக, செம, 'கெத்து' காட்டி வருகிறார். கயிறில் தொங்கியபடி, பறந்து பறந்து அடித்து, துவம்சம் செய்யும் சண்டை காட்சிகளைப் பார்த்து, கோலிவுட், 'ஹீரோ'க்களே மிரண்டு நிற்கின்றனர். பட்ட பாட்டுக்கு பலன் கை மேல்!- எலீசாஉயிர் தோழனுடன் இணைந்த, பாரதிராஜா!பாரதிராஜா இயக்கிய, முதல் படமான, 16 வயதினிலே துவங்கி, கடலோரக்கவிதைகள், என்னுயிர்த்தோழன், புதுநெல்லு புதுநாத்து மற்றும் நாடோடித்தென்றல் என, தொடர்ச்சியாக படங்களுக்கு இசையமைத்து வந்தார், இளையராஜா. அதன்பின், அவர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, பாரதிராஜா- - இளையராஜா கூட்டணி தொடரவில்லை. இந்நிலையில், எட்டு ஆண்டுகளுக்குப் பின், சமீபத்தில், சொந்த ஊரான தேனிக்கு சென்ற இடத்தில், வைகை நதிக்கரை ஓரத்தில் மீண்டும் சந்தித்து பேசியுள்ளனர். இந்த செய்தியை வெளியிட்டுள்ள, பாரதிராஜா, 'இயலும், இசையும் இணைந்தது; இதயம் என் இதயத்தைத் தொட்டது...' என்று, 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளார்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!திருமணத்திற்கு பின், காதல் மனைவி நடிப்பதற்கு, 'கிரீன் சிக்னல்' கொடுத்தார், 'பிக்-அப்' நடிகர். ஆனால், மனைவி மற்ற நடிகர்களுடன், 'டூயட்' பாடுவது பிடிக்கவில்லை. அதனால், மனைவியை மீண்டும் நடிக்க அழைத்த இயக்குனர்களை தொடர்பு கொண்டு, 'அவர், இனிமேல் நடிக்க மாட்டார்...' என சொல்லி, வந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பியிருக்கிறார், நடிகர். கணவரே தன் படங்களுக்கு, 'ஆப்பு' வைத்து வரும் சேதியறிந்து, செம கடுப்பாகி விட்டார், நடிகை. இதையடுத்து, 'சினிமாவில் நடிக்க தடை போட்டால், கோர்ட்டு படியேறி விடுவேன்...' என்று, நடிகரை கடுமையாக எச்சரித்துள்ளார், அம்மணி. இதனால், பீதியில் கிடக்கிறார், 'பிக்-அப்' நடிகர்.'ஏண்டா டேய், பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பிட்டு, ஆர்யா மாதிரி புலம்பிக்கிட்டு இருக்கியே... வெளியே போனால் நாலு பேருகிட்ட பேசி, பழக வேண்டியிருக்கும்... இதெல்லாம் தெரிஞ்சுதானே, வேலைக்கு அனுப்பினே... போய் வேலையை பாருடா...' என்று மகனுக்கு அறிவுறுத்தினார், அப்பா.சினி துளிகள்!* ஹிந்தி நடிகை, கத்ரினா கைப் தயாரித்து வெளியிடும், அழகு சாதன பொருளின் விளம்பர படத்தில் நடித்துள்ளார், நயன்தாரா.* மனைவி சாயிஷாவுடன், ஐதராபாத்தில் குடியேறியிருக்கிறார், ஆர்யா.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !