உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

பாலிவுட் மோகத்தில், கோலிவுட், 'ஹீரோ'கள்!தமிழ் சினிமாவில் இருந்து, பாலிவுட்டிற்கு சென்ற ரஜினி, கமல் இருவரும், ஓரிரு படங்களோடு திரும்பிய நிலையில், தற்போதைய நடிகர்களில், தனுஷ், பாலிவுட்டில் திறமை காட்டி வருகிறார். அதையடுத்து, விஜய்சேதுபதி இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், விஜய், அஜீத் போன்ற நடிகர்களின் கவனமும், பாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது. இந்நிலையில், மாஸ்டர் படத்தை, ஹிந்தியில், 'டப்' செய்து வெளியிட்டு, விஜய், 'டிரெயல்' பார்த்துள்ளார். அடுத்தபடியாக, அஜீத்தும், 'வலிமை படத்தை, ஹிந்தியில், 'டப்' செய்து வெளியிடப் போகிறேன்...' என, கூறியுள்ளார்.— சினிமா பொன்னையாரம்பாவிற்கே சவால் விடும், நந்திதா!அட்டகத்தி நந்திதா என்றாலே, குடும்ப குத்துவிளக்கு என்று தான், கோலிவுட்டில் சொல்வர். ஆனால், அப்படிப்பட்ட நந்திதாவும், தற்போது புடவைக்கு, 'குட் - பை' சொல்லி, குத்துப்பாட்டு நடிகையாக உருவெடுத்துள்ளார். அதையடுத்து, தொடையழகி ரம்பாவிற்கே சவால் விடும் வகையில், தன் தொடையழகை பல கோணங்களில் படம் பிடித்து, அதை ரசிகர்களின் தரிசனத்துக்கு வெளியிட்டவர், 'இது, சும்மா டிரெய்லர் தான் கண்ணு... அடுத்தாப்ல, 'சிக்ஸ்பேக், செவன் பேக்'கெல்லாம் இறக்கி விடுறேன் பாரு...' என்று, சூடேத்தி விட்டுள்ளார். இருந்த வெள்ளத்தைத் தள்ளிற்றாம் வந்த வெள்ளம்!— எலீசாஅமலாபாலின், ஆயுர்வேத குளியல்!அனுஷ்கா உள்ளிட்ட சில நடிகையர், முகத்தில் வெளிப்பட்ட முதிர்ச்சியை, வெளிநாடுகளுக்கு சென்று, 'லேசர்' சிகிச்சை மூலம் இளமையாக மாற்றினர். ஆனால், அமலாபாலோ, ஆயுர்வேதத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். அதனால், கேரளாவில் உள்ள ஆயுர்வேத முகாமில், உடம்பை என்றென்றும், 16 வயதாக வைத்திருக்கக்கூடிய மூலிகை குளியல் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதோடு, தன் இளமை ரகசியம் குறித்து கேட்கும் சில முதிர்கன்னி நடிகையருக்கு, இந்த ஆயுர்வேத குளியல் விஷயத்தை சொல்லி, அவர்களையும் கேரளாவிற்கு படையெடுக்க வைக்கிறார். அழகுப் பெண்ணே காத்தாயி; உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி!— எலீசாஇளசுகளை அலறவிடும், பூமிகா!ரோஜா கூட்டம் பூமிகா, தன், 42 வயதை மறந்து, 22 வயது நடிகையை போல், கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு, 'சோஷியல் மீடியா'வை அலற விட்டுள்ளார். எத்தனையோ இளவட்ட அம்மணியர், இதே கவர்ச்சி களேபரத்தை நடத்தி வந்தபோதும், பூமிகாவின் பூரிப்பான இளமைக்கே இளவட்டங்கள், 'லைக்'குகளை வாரி வழங்கி வருகின்றனர். பூமிகாவின் இந்த அதிரடி ஆட்டம் கோலிவுட்டிலும் எதிரொலித்ததை அடுத்து, சில இயக்குனர்கள், விவகாரமான வேடங்களுடன் அம்மணியை வட்டம் போடத் துவங்கி இருக்கின்றனர். காலம் அல்லாத காலத்தில் காய்த்ததாம் பேய் சுரைக்காய்!— எலீசாஅருவா - கம்பு வேண்டாம்!சுப்ரமணியபுரம் படம் துவங்கி, இப்போது வரை, ஜூனியர் ராமராஜனாக, கிராமத்து கதைகளாக நடித்து வந்துள்ள, சசிகுமாருக்கும், 'கோட் - ஷூட்' அணிந்து நடிக்கும் ஆசை ஏற்பட்டு விட்டது. அதை, இயக்குனர்களிடம் சொன்னால், 'உனக்கெல்லாம் எதற்கு இந்த வேண்டாத வேலை...' என்று, கிண்டல் அடிப்பர் என்பதால், தானே அப்படியொரு, 'போட்டோ ஷூட்' நடத்தி, தன்னை கிராமத்தானாகவே பார்த்து வந்த இயக்குனர்களுக்கு அனுப்பி, 'ஷாக்' கொடுத்துள்ளார். அதோடு, 'படத்துக்குப் படம், வேஷ்டி- - லுங்கி-, அருவா- - கம்புன்னு நடிச்சு போரடிச்சிப் போச்சு. என்னையும் கொஞ்சம் கூலிங்கிளாஸ், ஜீன்ஸ் போட்ட டவுனுக்காரனா காட்டுங்க, பாஸ்...' -என்று, கெஞ்சலாக கேட்கிறார், சசிகுமார்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!தாமரை கட்சியில் இணைந்துள்ள மூன்றெழுத்து, பூ நடிகைக்கு, அந்த கட்சி, ஒரு புதிய, 'அசைன்மென்ட்' கொடுத்துள்ளது. அதாவது, தென்னிந்தியாவில் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக, பிரபலமான திரை நட்சத்திரங்களை கட்சிக்குள் இழுக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதனால், தமிழ், தெலுங்கு சினிமாவில், தனக்கு நெருக்கமாக உள்ள, நடிகர் - நடிகையருக்கு, அரசியல் ஆசை காட்டி, கட்சிக்குள் இழுக்கும் வேலைகளைத்தான் தற்போது முழுநேரமும் செய்கிறார், பூ நடிகை. அந்த வகையில், இந்த நடிகை, தாமரை கட்சியில் சேர்ந்த பிறகு, அரசியல் வேலைகளை விட, நடிகர்- - நடிகையரை, கட்சிக்குள் இழுக்கும், பி.ஆர்.ஓ., வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.'நம்ம கம்பெனியில, மூன்று பிரிவு சங்கங்கள் இருப்பது உனக்கு தெரியும் தானே...''ஆமா... இருக்கு. அதுக்கென்ன இப்ப...''நம்ம கம்பெனி மானேஜருக்கு, இப்ப, பி.ஏ.,வா இருக்கும், வடமாநிலத்தைச் சேர்ந்த, குஷ்பா என்ற பொண்ணு, ஆறு மாசத்துக்கு ஒரு முறை, வெவ்வேறு பிரிவுக்கு பணி மாறுதல் பெற்று, போயிடுது... அந்தப் பொண்ண எந்த சங்கத்துல சேர்ப்பதுன்னு, ஒரே குழப்பமா இருக்கு. அதுக்காக, ஒரு கஷ்டமான வேலையை கொடுத்து, செய்யச் சொல்லப் போறோம்.'அது என்னென்னா... கம்பெனி முதலாளிக்கிட்ட தைரியமா பேசி, மூன்று சங்கங்களுக்கும், தனித்தனியா கம்பெனி வளாகத்துக்குள்ளேயே, மூன்று கட்டடம் கட்டித் தர ஏற்பாடு செய்ய சொல்ல போறோம். இந்த வேலையை சாமர்த்தியமா செஞ்சுட்டா, அது எந்த சங்கத்துல சேர விரும்புதோ, அதிலே சேர்த்துட வேண்டியது தான். என்ன சொல்ற...' என்று பேசிக் கொண்டனர், தொழிற்சாலை ஊழியர்கள், இருவர். சினி துளிகள்!* ரஜினியுடன், அண்ணாத்த படத்தில் நடித்து வரும், குஷ்பு, 'இந்த படத்திற்கு பின், சினிமாவில், என், 'ரீ- - என்ட்ரி ஸ்டார்ட்' ஆகும்...' என்று கூறி வருகிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !