உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

அதிர்ச்சியில் தமிழ் சினிமா!கடந்த தி.மு.க., ஆட்சியில், நூறு சதவீதம் வரிவிலக்கை அனுபவித்தது தமிழ் சினிமா உலகம். ஆனால், அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்ததும், முதலில், 15 சதவீதம் கேளிக்கை வரி அறிவிக்கப்பட்டு, இப்போது அதை, 30 சதவீதம் ஆக்கியுள்ளது. இதனால், தொழிலாளர் - தயாரிப்பாளர்கள் பிரச்னையில் திணறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா உலகம், அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.— சினிமா பொன்னையா.ப்ரியாமணிக்கு ரீ-என்ட்ரி!பருத்தி வீரன் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தேசிய விருது பெற்ற போதும், ப்ரியாமணியை தமிழ் சினிமா ஆதரிக்கவில்லை. இந்நிலையில் தெலுங்கு, கன்னடத்தில் நடித்து வரும் ப்ரியாமணிக்கு, தன் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் ஒரு வேடம் கொடுத்துள்ளார் அப்பட இயக்குனர். இதனால், உற்சாகமடைந்துள்ள ப்ரியாமணி, 'இப்படம் தமிழில் எனக்கு ரீ-என்ட்ரியாக அமையும்...' என்கிறார். படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்க வேண்டும்!— எலீசா.முதலமைச்சராகும் த்ரிஷா!கட்டாமிட்டா இந்தி படத்தில், பொதுப்பணித்துறை அதிகாரியாக நடித்த த்ரிஷா, தமிழ், கன்னடத்தில் உருவாகும், சி.எம்., படத்தில் முதலமைச்சராக நடிக்கிறார். தமிழ் பதிப்பில் அர்ஜுனும், கன்னட பதிப்பில் கன்னட ராஜ்குமாரும் ஹீரோக்களாக நடிக்கும் இப் படத்தில், இரண்டு மொழி களிலும் த்ரிஷாதான் நாயகி. பிடித்தாலும் பிடித்தாய் புளியங் கொம்பை!— எலீசாஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி!தன் இசையில் உருவான, 24 சினிமா பாடல்களை தொகுத்து, இசை நிகழ்ச்சி நடத்துகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அடுத்த மாதம் துவங்கி, நான்கு மாதங்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி சென்னையில் ஆரம்பித்து, கோலாலம்பூர் வரை நடக்க உள்ளது. பல பின்னணி பாடகர் - பாடகிகள் பாடும் இந்நிகழ்ச்சியில், முதன் முறையாக தன் சொந்தக் குரலில் பாடுகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.— சி.பொ.,விஷாலுக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை!சண்டக்கோழி படத்தில் இணைந்த டைரக்டர் லிங்குசாமி, விஷால் கூட்டணி, மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். ஆனால், இந்தப் படம், முந்தைய படம் போன்று ஆக்ஷன் கதை இல்லை; ரொமான்டிக் மியூசிக் சப்ஜெக்ட். இப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக, ஹாலிவுட் நடிகை இறக்கு மதியாகிறார்.— சி.பொ.,ஸ்ருதிஹாசன் ஆர்வம்!ஏழாம் அறிவு படத்தில், விஞ்ஞானியாக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். இதற்காக, பிரபல விஞ்ஞானிகள் சிலரை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டதாக சொல்லும் ஸ்ருதி, இனிமேல் வழக்கமான காதல் கதைகளில் நடிப்பதை குறைத்து, இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடிக்க இருப்பதாக கூறுகிறார். வந்த வினை போகாது; வராத வினை வராது! — எலீசாவடசென்னை கதையில் சிம்பு!ஆடுகளம் படத்திற்கு பிறகு, மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம் இயக்கயிருந்தார் வெற்றி மாறன். ஆனால், வடசென்னையை களமாகக் கொண்ட அந்த ஆக்ஷன் கதைக்கு, தனுஷை விட, சிம்புவே பொருத்தமாக இருப்பார் என்று, கடைசி நேரத்தில் சிம்புவை, 'புக்' செய்து விட்டார் வெற்றி மாறன். இப்படத்துக்காக, ஜீன்ஸ் - டீ-சர்ட்டை கழற்றி எறிந்து, லுங்கி - பனியன் அணிந்த வட சென்னைவாசியாக கெட்-அப்பை மாற்றுகிறார் சிம்பு.— சி.பொ.,நண்பன் படத்தில் ராகவா லாரன்ஸ்!காஞ்சனா படத்தின் வெற்றி, நண்பன் படத்தில் ராகவா லாரன்சுக்கு, சான்ஸ் வாங்கிக் கொடுத் துள்ளது. ஏற்கனவே, விஜய்யுடன், திருமலை படத்துக்காக ஒரு பாடல் காட்சியில் ஆடிய லாரன்ஸ், இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அந்த வகையில், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு அடுத்தபடியாக, ஐந்தாவது ஹீரோவாக ராகவா லாரன்சை, தன் நண்பன் பட்டியலில் சேர்த்துள்ளார் டைரக்டர் ஷங்கர்.— சி.பொ.,திவ்யா ஸ்பந்தனாசின் புதிய கண்டிஷன்!கன்னடத்தில் திவ்யா ஸ்பந்தனாஸ் நடித்த, அம்ருதா தாரே, ஜஸ்ட் மதனள்ளி ஆகிய படங்களில் அவரது நடிப்புக்கு விருதுகள் கிடைக்க இருந்ததாம். ஆனால், அவர் தனக்குத்தானே, 'டப்பிங்' பேசாத ஒரே காரணத்திற்காக, விருது பெறும் வாய்ப்பு தவறி விட்டதாம். அதனால், 'புதிதாக தனக்கு ஒப்பந்தமாகும் படங்களில், 'எனக்கு நான்தான், 'டப்பிங்' பேசுவேன்...' என்று கண் டிஷன் போட்டே, கமிட் ஆகி வருகிறார். வருந்தி, வருந்திப் பார்த்தாலும், வருகிற போதுதான் வரும்!— எலீசாஅன்னா ஹசாரேவை கவர்ந்த படம்!காமராஜ் படத்தை இயக்கிய அ.பாலகிருஷ்ணன், அடுத்து, முதல்வர் மகாத்மா என்றொரு படத்தை, இன்றைய சூழலில் காந்திஜி இருந்திருந்தால், ஊழலை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, இயக்கியுள்ளார். இந்த சேதியறிந்த அன்னா ஹசாரே, இப்படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவருக்காக புனே சென்று படத்தை திரையிட்டு காண்பிக்க உள்ளார் அ.பாலகிருஷ்ணன்.— சினிமா பொன்னையா.* மகன் ரிஷியின் படிப்பு மற்றும் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்த ரோகிணி, பம்பரம் என்றொரு படத்தை இயக்குகிறார். சமீபத்திய மக்கள் பிரச்னையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில், தானும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லும் ரோகிணி, படப்பிடிப்பை துவங்க பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !