உள்ளூர் செய்திகள்

குளிர்காலத்துக்கு ஏற்ற உணவுகள்!

குளிர் காலத்தில் பழங்களை சாப்பிட்டால், ஜலதோஷம் பிடிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இது தவறு. அவ்வாறு சாப்பிடாமல் இருந்தால் தான், கிருமிகள் எளிதில் உடலில் புகுந்து விடும். குளிர்காலத்தில் சாப்பிட வேண்டியவைகள் என்னென்ன என்று பார்ப்போம்! ஆரஞ்சு: குளிர்காலத்தில், ஜலதோஷ பாதிப்பு அதிகம் இருக்கும். ஆகவே, அவற்றை தடுக்க உடலில் போதிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின் சி அவசியம். அந்த சத்து, ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது. பசலைக் கீரை: பொதுவாகவே கீரை வகைகளை அதிகம் சேர்த்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும், பசலைக் கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்து வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் சேர்ந்து, நோய் தாக்காமல் ஆரோக்கியமாக வைக்கும். வேர்க்கடலை: வேர்க்கடலையை வறுத்து சாப்பிட்டால், உடலில் உள்ள வெப்பம் சரியான அளவு இருப்பதோடு, புரோட்டீனும் அதிகம் கிடைக்கும். கொய்யாப்பழம்: நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன், இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கும். கொய்யாவில் உள்ள, 'லைகோபைன்' இதயத்தில் ஏற்படும் பிரச்னையை தடுக்கிறது. ஆகவே, குளிர்காலத்தில் சிவப்பான உட்பகுதி கொண்ட கொய்யா பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது. கேரட்: கேரட்டில் வைட்டமின் பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன. இதில் உள்ள கரோட்டீன், உடலினுள் செல்லும்போது வைட்டமின், 'ஏ'வாக மாறி விடுகிறது. எனவே, கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது. நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்களை குளிர்காலத்தில் சாப்பிட்டால், கிருமிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். - ஜி.செங்கனிராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !