உள்ளூர் செய்திகள்

தேயிலை தோட்டம் உருவானது எப்படி?

கேரள மாநிலம், மூணார் பகுதி, தேயிலை தோட்டங்கள் நிறைந்த அழகிய மலைப் பிரதேசம். இந்த தேயிலை தோட்டங்களை காணவே, சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர்.இங்கு, முதன் முதலில் தேயிலையை பயிரிட்டது, ஏ.எச்.ஷார்ப் என்ற வெள்ளைக்காரர். 1880ல், மூணார் பகுதிக்கு வந்து, முதல் தேயிலை செடியை நட்டார்.இந்தியர்களை அடிமைகளாக கருதும் பிரிட்டிஷாரின் வழி வந்தவரான, ஷார்ப், தமிழர்களையும், மலையாளிகளையும் அழைத்து வந்து தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய வைத்தார். அதிலிருந்து உருவானது தான், மூணார் மற்றும் குன்றுகளில் காணப்படும் அழகான தேயிலை தோட்டங்கள். அன்று, 16 தேயிலை தொழிற்சாலைகள் இருந்தன. தேயிலை ஏற்றிய வண்டிகளை இழுத்துச் செல்ல, இங்கிலாந்திலிருந்து, 500 மாடுகளை கப்பலில் அழைத்து வந்தார், ஷார்ப்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !