கவிதைச்சோலை - கடற்தாமரை!
முக்கடலும் சங்கமிக்கும் குமரியில் உதித்து - அதன்முன்னேற்றப் பாதைக்கு வித்திட்ட மூத்தவரே...மக்கள் தொண்டே மகேசன் தொண்டெனமக்கள் பணி செய்த மா மனிதரே!ஜாதி - மத பேதங்களை கடந்துகல்வி அனைவருக்கும் பொதுவெனகல்வி சாலைகள் திறந்த கல்வியாளரே!தாம் பிறந்த மண்ணிற்குதம்மால் முடியும் வரை அல்லதம் மூச்சு உள்ளவரைபணி செய்த தமிழ் மாமணியே!கல்விப்பணி ஆற்றிய சான்றோரைகவுரப்படுத்தி ஊக்குவித்த உத்தமரே!தமிழர் வாழ் தென் குமரியைதாய்திரு நாட்டுடன் இணைப்பதேதலையாய கடமையென்று உணர்ந்துதமிழ் தொண்டாற்றிய நாயகனே!பொழுது விடியும் தருணம் நம் கரங்களில்பொக்கிஷமாக விழும் இதழைபொது நோக்கமுடன் சேர்த்தவரே!படைப்புகளுக்கு மட்டுமல்லாமல்படைப்பாளிகளுக்கும் தம் நாளிதழின் மூலம்வாழ்வளித்த பெருந்தகையே!வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்துமக்கள் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றமகத்தான படைப்பாளியே!ஆண்டுகள் பற்பல கடந்தாலும்அன்று போல் இன்றும் நினைவு கூர்கிறோம்அமரரான கடற்தாமரையே!— ரெஷ்மி சிவகுமார், கோயம்புத்துார்.