மன்னர் ஆட்சி
ஐரோப்பா கண்டத்தில் உள்ள, உலகின் இரண்டாவது மிகச் சிறிய நாடான, மொனாக்கோ நாட்டில் ஒரு நகரம், மான்டி கார்லோ. இன்றும், இங்கு மன்னர் ஆட்சி தான். இதன் மேற்கில், பிரான்சும், கிழக்கே ஜெர்மனியும் உள்ளது.ஒரு சமயம், இந்த நாடு, எதிரிகளிடம் இரு நகரங்களை இழந்தது. இதனால் ஏற்பட்ட பண சிக்கல்களை தவிர்க்க துவக்கப்பட்டது தான், சூதாட்ட விடுதிகள்.முதலில் இவை, பிரபலமாகவில்லை. பின், ஒரு ஜெர்மன் சூதாட்ட விடுதியாளரை அழைத்து வந்து, மீண்டும் ஆரம்பிக்க, பிரபலங்கள் வர, மிகவும் புகழ்பெற்று விட்டது.மொனாக்கோ நாட்டு, சூதாட்ட விடுதிகளின் முதலாளி, மன்னர் தான். இங்கு, 10 விதமான சூதாட்டம் நடக்கிறது. உள்ளூர்காரர்களுக்கு சூதாட்ட விடுதிகளில் நுழைய அனுமதி இல்லை.ஏராளமான பிரபலங்கள் வந்து செல்லும், இந்நகரின் ஜனத்தொகை, 3,500 தான். பல ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மற்றும் 'டிவி' தொடர்களில், இந்நகர் இடம்பெற்றுள்ளது.உலக பார்முலா கார் ரேஸ், உலக குத்துச்சண்டை போட்டி மற்றும், 'பேஷன் ஷோ' இங்கு நடக்கின்றன.மான்டி கார்லோ நகரை சுற்றி, இன்று ஏராளமான டென்னிஸ், கார் ரேஸ் வீரர்கள், ஹாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் உலகில் பிரபல பணக்காரர்கள், வீடு வாங்கி வசிக்கின்றனர்.— ஜோல்னாபையன்.