உள்ளூர் செய்திகள்

கண்பார்வை கிடைத்த பின்னரே திருமணம்!

பாகுபலி மற்றும் குக்கு போன்ற தமிழ் மற்றும் மலையாள படங்களில் பாடல்கள் பாடிய, வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை இல்லை. அவரிடம், 'நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை...' என்று கேட்ட போது, 'கடந்த, 28 ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்தும் கிடைக்காத புகழ், ஒரு சில சினிமா பாடல்கள் மூலம் கிடைத்துள்ளது. எனக்கு கண் பார்வை இல்லையே என, நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. ஆனாலும், அறுவை சிகிச்சைக்கு பின், பார்வை கிடைத்த பின், கண்டிப்பாக திருமணம் செய்வேன். அப்போது தானே, பிறர் உதவி இல்லாமல் வாழ முடியும்...' என்று சொல்லி, சிரித்தார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !