உள்ளூர் செய்திகள்

மெக்கானிக் குடும்பம்!

தாத்தா - மகன் - பேத்தி என, மூன்று தலைமுறையை சேர்ந்தவர்கள் புல்லட் மெக்கானிக்குகளாக இருக்கின்றனர். 89 வயதான டொமினிக், இப்போது முழுநேர மெக்கானிக்காக இல்லாவிட்டாலும், தன் கடையின் மேற்பார்வையாளராக இருக்கிறார். இவரது மகன் ஜோசப், 52, பட்டறையில் முழு நேர உழைப்பாளியாக இருக்கிறார். இவரது மகள் தியா, பிளஸ் 1 மாணவி. 'கொரோனா' ஊரடங்கின் போது, தன் தந்தையிடம் இருந்து தொழிலை கற்று, இன்று திறமையான மெக்கானிக்காக இருக்கிறார்.இந்த பட்டறை, கேரள மாநிலம், கோட்டயம் ரயில் நிலையம் எதிரில் இருக்கிறது.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !