மருத்துவ டிப்ஸ்!
காய்ந்த கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றை மிக்சியில் நைசாக பொடித்து, பல் கூச்சம், வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தினால், வலி சரியாகி விடும்*வறட்டு இருமல், தொண்டைப் புண் ஆகியவை இருந்தால், வெந்நீரில் தேன் கலந்து பருகவும். உடனே பலனளிக்கும்*நார்ச்சத்து அதிகமுள்ள உணவு சாப்பிட்டால், சர்க்கரை, கொலெஸ்ட்ரால் குறையும்; எடை கட்டுப்படும்*தேங்காய் எண்ணெயையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து தேய்த்தால், மூட்டு வீக்கம் மற்றும் வலி சரியாகும்*சாதம் வடித்த கஞ்சியில் உப்பு, மோர் அல்லது சர்க்கரை, பால் சேர்த்து குடித்து வந்தால், எலும்புகள் வலுவடையும். உராய்வால் ஏற்படும் மூட்டு வலிகள் குறைந்து, மூட்டுகளுக்கு வலு ஏற்படும். உடம்பு சூட்டைக் குறைக்கும்* அன்னாசி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ஜலதோஷத் தொல்லை குறையும்*வயிற்று வலி, அஜீரணம் என்றால் ஒரு வெற்றிலையுடன் கொஞ்சம் சீரகம், ஓமம், உப்பு சேர்த்து நன்றாக மென்று சாப்பிடுங்கள். வலி சரியாகிவிடும்; வயிறும் லேசாகும்.