உள்ளூர் செய்திகள்

மழைக்கால நோய்கள்: பாதுகாப்பாக இருப்பது எப்படி?

மழைக்காலம் துவங்கிவிட்டது. மழைக்கால நோய்கள் பற்றியும், வரும் முன் அவற்றிலிருந்து தற்காத்து கொள்வது எவ்விதம் என்று பார்ப்போம்:மலேரியா: 'பிளாஸ்மோடியம்' என்ற, ஒட்டுண்ணியால் மலேரியா காய்ச்சல், உண்டாகிறது. இது, ஒருவரின் உடலுக்கு பெண் கொசுக்கள் வாயிலாக கொண்டு சேர்க்கப்படுகிறது. பாதிக்கப் பட்டவரிடமிருந்து, 'அனாபிலிஸ்' என்ற பெண் கொசுவானது மேற்கண்ட ஒட்டுண்ணியை பெற்று, வேறு ஒருவரை கடிக்கும்போது, அவருக்கு மலேரியா காய்ச்சல் தொற்றிக் கொள்கிறது.மலேரியா காய்ச்சல் வந்தவர்களுக்கு ரத்த சோகை, கடும் காய்ச்சல், கடுங்குளிர் போன்றவை இருக்கும். இதற்கான வீட்டு வைத்தியம், மிக எளிதானது. மிளகுத்துாள், இரண்டு பல் பூண்டு நசுக்கி, தேனுடன் வெந்நீர் சேர்த்து கலந்து குடித்து வர, ஒரு வாரத்தில் பலன் தெரியும்.வில்வம் பூ, துளசி சம அளவு எடுத்து சாறாக்கி, தேன் கலந்து இரு வேளை குடித்து வர, கடுமையான காய்ச்சலும் குறையும். துளசிச்சாறு, இஞ்சிச் சாறு சம அளவு எடுத்து, தேன் கலந்து குடித்து வர, பூரண குணம் கிடைக்கும்.டெங்கு: மழைக் காலங்களில் மிக அதிகமாக மக்களை அச்சுறுத்தும் நோய்களில் இதுவும் ஒன்று. 'ஏடிஸ் இஜிப்டை' என்ற பெண் கொசுக்கள் கடிப்பதால் பரவுகிறது, டெங்கு. ஒருவரிடமிருந்து வேறொரு நபருக்கு என நேரடியாக பரவாது. ஆனால், டெங்கு காய்ச்சல் உள்ள வரை, 'ஏடிஸ் இஜிப்டை' என்ற பெண் கொசு கடித்து, வேறொரு நபரை கடிக்கும்போது, டெங்கு காய்ச்சல் தொற்றிக் கொள்கிறது.காய்ச்சல் அதிகமிருக்கும். உடல் சோர்வு ஏற்படும். தலைவலி, வாந்தி வரும். தசை வலி, மூட்டு வலி வரும். உடலில் சிவப்பு தடிப்புகள் உருவாகும். டெங்கு காய்ச்சல் அதிகளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடலில் ஏதோ எலும்புகள் உடைவது போன்ற கடுமையான வலி இருக்கும்.டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை நாட வேண்டும். பயம் கொள்ளத் தேவையில்லை. பொதுவாகவே மழைக் காலங்களில் மாதம் ஐந்து நாட்கள் என, நாம் தொடர்ந்து நிலவேம்பு கஷாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் வந்த பின்னரும் நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச் சாறு, 10 - 30 மில்லி வரை தினசரி எடுத்துக் கொள்ளலாம்.இது, டெங்கு காய்ச்சல் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரத்தத்தில், 'பிளேட் லெட்' எனப்படும் ரத்தத் தட்டுகள் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளும்.சிக்குன் குனியா: 'ஏடிஸ் இஜிப்டை' என்ற பெண் கொசுக்கள் கடிப்பதன் மூலமாகவே இந்நோயும் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், மூட்டு வலி, கடுங்குளிர் போன்றவை இதன் அறிகுறிகள்.சிக்குன் குனியா வந்து நிவாரணம் பெற்றவர்களில் சிலருக்கு, மாதக்கணக்கிலும் மூட்டு வலி நீடிப்பதுண்டு. இதற்கு, நிலவேம்பு கஷாயம், அமுக்கிரா சூரண மாத்திரை, பிரமானந்த பைரவ மாத்திரை, கற்பூராதி தைலம், பிண்ட தைலம் போன்றவை சித்த மருத்துவமனைகளில் வழங்கப்படுகின்றன.டைபாய்டு: இது, 'சால்மோனெல்லாடைபி' எனப்படும் பாக்டீரியாவால் பரவுகிறது. மழைக் காலங்களில் மேற்கண்ட பாக்டீரியா அதிக அளவில் பரவும் தன்மை கொண்டது. பசியின்மை, வயிற்று வலி, அதிகளவு காய்ச்சல், தலைவலி போன்றவை இதன் அறிகுறிகள்.இதை, குடல் காய்ச்சல் என்றும் குறிப்பிடுவர். அக்டோபர் முதல் ஜனவரி வரை இக்காய்ச்சல் அதிகமாக காணப்படும்.ஐந்திலிருந்து, 10 வயது வரை உள்ள சிறுவர் - சிறுமியரை, இக்காய்ச்சல் பெருமளவில் பாதிக்கும். ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள், நோய் எதிர்பாற்றல் சக்தி குறைந்த குழந்தைகள், சுகாதாரம் குறைவான பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் என, டைபாய்டு காய்ச்சல் ஏற்படும்.வீட்டில் ஒருவருக்கு வந்தால் போதும், அடுத்தடுத்து ஒவ்வொருவருக்கும் எளிதில் வந்துவிடும்.டைபாய்ட் கிருமிகள், ஈர நிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேல் உயிர் வாழும். அந்த நிலத்தில் விளைந்த காய்கறி மற்றும் பழங்களை சுத்தம் செய்யாமல் சாப்பிடும்போது, இந்நோய் வரும். அசுத்த உணவு, துாய்மையற்ற குடிநீர் போன்றவை மூலமாக அந்த பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழையும்.நன்றாக காய்ச்சிய நீரை ஆற வைத்து குடிக்க வேண்டும். உணவை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். அவ்வப்போது சீரகத் தண்ணீர் அருந்த வேண்டும். பொதுவாக சீரகத் தண்ணீர் என்பது, மழை காலங்கள் என்று மட்டுமல்லாமல் எல்லா நாட்களிலுமே ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளலாம். நம் உடலின் உள் உறுப்புகளை சீராக வைத்திருக்க உதவுவதுதான், இந்த சீரகம்.டைபாய்டு காய்ச்சல் கண்டவர்கள் மலம், சிறுநீர் கழித்தவுடன் கைகளில் நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். மிளகு கஷாயம் குடிக்கலாம். மிளகை வறுத்து நீரிலிட்டு கொதிக்க வைத்தும் குடிக்கலாம். காரம் அதிகமாக உணர்ந்தால், பனை வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.பார்லி அரிசி கஞ்சி, இஞ்சி, துளசி, சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம். புதினா கஷாயம் குடித்து வர காய்ச்சல் குறைந்து வரும்.தொகுப்பு: மா. வர்ஷா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !