பாம்பு விஷத்துக்கு மவுசு!
பாம்பென்றால் படையும் நடுங்குமல்லவா! ஆனால், பாம்பின் விஷம் மனிதனை கொல்வதற்கு மட்டுமில்லை, உயிரையும் காப்பாற்றுகிறது. பாம்பு கடித்தால், மனித ரத்தம் கெட்டியாகி விடும். அப்போது, ரத்தத்தை பழைய நிலைக்கு கொண்டு வர, பாம்பின் விஷத்தால் தயாரிக்கப்பட்ட மருந்து தான் பயன்படுகிறது.பெண்களின் அழகு சாதன பொருட்கள் மற்றும் முதுமையால் தோலில் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்யும் களிம்பு தயாரிக்கவும் பாம்பின் விஷம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை தயாரிக்க, நாக பாம்பின் விஷம் தான் உகந்தது. எனவே, நாக பாம்பின் விஷத்துக்கு அதிக கிராக்கி உள்ளது.பழங்காலங்களில், பாம்பை பயத்துடன் பார்த்ததோடு, தெய்வமாக கருதி வணங்கியும் வந்தனர். ஆனால், இன்று சமூக வலைதளங்கள் செய்து வரும் விழிப்புணர்வால், பாம்பை வில்லனாக மக்கள் கருதுவது இல்லை என்பதால், அதன் அழிவும் கணிசமாக குறைந்துள்ளது. — ஜோல்னாபையன்