நெயில் பாலிஷ் இவற்றுக்கும் பயன்படும்!
* நெட்லான் கொசு வலை கிழிந்து விட்டால், நைலான் துணியில் நேச்சுரல் கலர் நெயில் பாலிஷைப் பூசி கிழிசல் மீது அதை ஒட்டி விடலாம்* ஷூ லேஸ் ஓரங்கள் சீக்கிரம் பிய்ந்து பிசிறு தட்டும். நேச்சுரல் கலர் நெயில் பாலிஷில் அந்த நுனிகளை முக்கி எடுத்தால், பிரிந்து போகாமல் இருக்கும்*அழகான பித்தளை, தாமிர கலைப் பொருட்கள் பொலிவிழந்து போகாமலிருக்க அவற்றின் மீது நேச்சுரல் கலர் நெயில் பாலிஷை பூசவும்*கொத்துச் சாவிகளை நாம் வேறு பூட்டுகளில் மாற்றிப் போட்டு அவசரத்தில் திண்டாடுவோம். வெவ்வேறு நிற நெயில் பாலிஷ்களை எடுத்து, பூட்டிலும், சாவியிலும் ஜோடியாக ஒரே நிற பாலிஷால் அடையாளம் வைத்து விடுங்கள். அவசரத்திலும் இந்த அடையாளத்தை வைத்து சுலபமாக ஜோடி சேர்க்கலாம்* பரிசாக வரும் பர்ஸ், பிளாஸ்டிக் பொருட்கள் மீது பெயர் அச்சிடப்பட்டிருக்கும். இதை நெயில் பாலிஷ் ரிமூவரில் நனைத்த பஞ்சால் துடைத்தால், சுலபமாக அழிந்து விடும்*கண்ணாடியில் படிந்திருக்கும் ஸ்டிக்கர் பொட்டின் பசை அழுக்கைப் போக்க, நெயில் பாலிஷ் ரிமூவரால் துடைக்கலாம்*சட்டைக்கு பட்டன் தைத்தவுடன், பட்டன் தைத்த நுால் மேல் நேச்சுரல் கலர் நெயில் பாலிஷை பூசினால், நுால் கெட்டிப்படும். பட்டன் பிய்ந்து போகாது.