கவிதைச்சோலை!
ஒற்றைக் கயிறு!* வாழ்க்கை சிகரத்தை நோக்கிய மலைப்பயணம்ஏறுவது மட்டுமே உன் வேலை...ஏறு... ஏறு... ஏறு!* பயணம் தான் குறிக்கோள்,சிகரம் அல்ல,வெற்றி அல்ல...முயற்சிதானே வாழ்க்கை!* இன்றைய சோம்பல் நாளைய தேக்கம்இன்றைய சுகங்கள் நாளை உன் சுமைகள்நிழலை நோக்கி நகர்ந்து விடாதே...உயரம், உயரம், உயரம் உன் பயணம்!* வியர்வை, ரத்தம் இரண்டையும் செலவழிஓய்வு, உறக்கம் மருந்துக்கு வைத்துக் கொள்...உடலெல்லாம் காயப்பட்டாலும்உன் புன்னகை காய்ந்து விடாமல் பார்த்துக் கொள்!* கற்களைக் கடக்க கஷ்டப்படாதே...கைகளால் பிடி, ஏறுகால்களால் மிதி, மேலே வா...அடுத்த உயரம் ஆரம்பமாகும்!* ஏறும்போது தடையாய் வந்த கற்கள்நீ தவறி விழும்போதுஉன்னைத்தாங்கிப் பிடிக்கும்!* சில அடி ஏறிபல அடி சறுக்கலாம்...கூட்டிக் கழித்துப் பார் உன் உயரம் வரை நிச்சயம் லாபம்!* ஏறுவது மட்டுமே உன் வேலைஏறு... ஏறு... ஏறு!விழுவதிலும் தவறில்லைவிழு... விழு... விழு...விழுந்து கொண்டே இரு...ஆனால், விட்டுவிடாதே...உச்சியை உன்னோடு இணைக்கும்ஒற்றைக் கயிற்றை!— எல்.எஸ்.கண்ணன், சென்னை.