கவிதைச்சோலை!
தேர் தட்டிலே ஒரு தேவ கீதம்!* வாழ்க்கைகுருஷேத்திரத்தில்வாடும் நமக்கு,கீதை உரைக்கும்பார்த்தசாரதிஅனுபவம்!* அஸ்திரம் எடுப்பதா,அமைதி காப்பதா?குழம்பும் மனதைஅதுதானேஆற்றுப்படுத்துகிறது!* வார்த்தை உபாயமும்வாதில் சகாயமும்வழங்கும்கிருஷ்ண வடிவம்அனுபவம்!* அது,பொங்கி எழுவதை விட பொறுமை காப்பதேபுத்திசாலித்தனம் என்கிறது!* காண்டீபம்கைநழுவினாலும்கவலைப்படாதேஎனகனிவாய் சொல்கிறது!* அனுபவம்ஒருபோதும்போரை விரும்புவதில்லை...பொறுத்துப் போதலேபொருத்தமானது என்கிறது!* போரிடாமலேவெற்றி எய்தலாம்...காத்திருப்பு மட்டுமேகவசமாய் இருந்தால்-இதுஅனுபவம் சொல்லும் கீதை!* நம்மில் பலர்,அனுபவ சாரதியைஅலட்சியம் செய்வதால்ரணகளப்படுகிறதுவாழ்க்கை!* சிக்கல் எழுகையில்அறிவு தேரில் அமர்ந்து வரும் அனுபவத்தைஅடைக்கலம் புகுந்தால்,ஆபத்தில்லாமல்ஆதாயம் பெறலாம்!— சு.விஜயலட்சுமி, கடம்பூர்.