கவிதைச்சோலை!
விமர்சனங்கள்!* விமர்சனங்கள்...நம்மைஆராதிக்கவா,அலசிப்பார்க்கவா?* விமர்சனங்கள்...வளர்ச்சிக்கு வழி வகுப்பவை...அதனால்,விமர்சனங்களைவிரோதித்து விடாதீர்!* யாரை உலகம்விமர்சனம் செய்யாமல்விட்டு வைத்திருக்கிறது!* சறுக்கினால்சந்தோஷப்படுகிறது...சாதித்தால்சங்கடப்படுகிறது!* விமர்சனங்கள்சாணைக்கற்கள்அவைபளிங்குக் கல்லல்லபளபளப்பாய் இருக்க!* முரண்படுபவர்களோடுஇணங்கிப்போய்தன்னைபண்படுத்திக் கொள்பவர்களேபலசாலிகள்!* மெச்சினால் மிதப்பதோகுட்டினால் குமைவதோவெற்றி விரும்பிகளின்வீரியம் கெடுப்பவை!* எழும் விமர்சனங்களுக்குஎல்லாம்நமக்குள்எதிர்விமர்சனம்எழாமலில்லை!* பாராட்டுபவனை நண்பனாய்பழிப்பவனை எதிரியாய்எண்ணும் மனம்தான்மறுகணமேமாற்றி யோசித்து மயங்குகிறது!* இந்த -அதிர்வலை வலைக்குள்அகப்படாது தப்பிப்பவர்விமர்சனங்களைக் கடந்துவெற்றியாளராகிறார்!* வளர்ச்சியை நிர்ணயிப்பதுவிமர்சனங்கள் என்றாலும்,வெற்றியைத் தீர்மானிப்பதுவிமர்சனங்கள் எழுப்பும்அதிர்வலைக்குள் அகப்படாதுபயணிக்கும் பக்குவம்!— ஸ்வாதி, கும்பகோணம்.