கவிதைச்சோலை!
கவனமாய் இருப்போம்!* வெளிச்சம் நிரம்பும்வீட்டிலிருந்துஇருள் வெளியேறும்என்பதைப் போல...இட்டு நிரப்புவதில்இருக்கிறதுஇன்பத்தின் சூட்சுமம்!* இதயத்தில்அன்பு நிரம்பவன்மம் வெளியேறும்;இரக்கம் நிரம்பகோபம் வெளியேறும்!* பொறுமை நிரம்பபொல்லாங்கு வெளியேறும்;பிறர் நலம் நிரம்பதன்னலம் வெளியேறும்!* இன்மொழி நிரம்பவசைமொழி வெளியேறும்;துணிவு நிரம்பஅச்சம் வெளியேறும்!* நேர்மை நிரம்பகயமை வெளியேறும்;திருப்தி நிரம்பபொறாமை வெளியேறும்!* முயற்சி நிரம்பதடைகளும் வெளியேறும்; தோழமை நிரம்பபகைமை வெளியேறும்!* வெளியேற்றப்படவேண்டியதைகணக்கில் எடுத்து,இட்டு நிரப்புவதில்கவனமாய் இருப்போம் இன்று முதல்...நம் உள்ளத்தில் தொடங்கிஉலகம் முழுவதும்!— கீர்த்தி, கொளத்தூர்.