கவிதைச்சோலை!
எங்கே போயிற்று, பெண் விடுதலை!* எங்கே போயிற்று பெண் விடுதலை?எங்கே போயிற்று பெண் விடுதலை?அது...தொலைந்து போன அந்த பெண்ணிடமேதேடுங்கள்!* நாகரிக மோகத்தில்நம்முடையகலாசாரத்தை அழித்தநங்கைகளிடமே தேடுங்கள்!* நெற்றி திலகமிட்டுகருங்கூந்தல் சீவிமலர் சூட்டிஅழகு பார்த்த தாயின் எதிரில்,கருங்கூந்தல் கத்தரித்துநாகரிக உடையில்நளினமாய் திரியும்...நங்கைகளிடம் தேடுங்கள்!* அதிகாலையில்புதுப்புனலாடிநளினமாய் மாக்கோலமிட்டுவீட்டில் குத்து விளக்கேற்றும்நிலைமாறி...அதிகாலையிலிருந்துஇரவு வரைஅலைபேசியும், கையுமாகத்திரியும் நங்கைகளிடம் தேடுங்கள்!* வேறு ஆடவர் முகம் பார்க்கநாணி கோணிகால்களால் கோலம் வரையும் நிலைமாறி...நட்பு எனும் பெயரில்ஆடவர்களுடன் ஊர் சுற்றும்நங்கைகளிடம் தேடுங்கள்!* 'இவர் தானடிஉன் மணாளன்'என்று கூறிய நிலைமாறி...கல்விச் சாலைசெல்லும் போது திருமணம்முடிவதற்குள் விவாகரத்துஎன்று திரியும்நங்கைகளிடம் தேடுங்கள்!* ஐயகோ...பாரதியே இதை பார்த்தால்கொதித்தெழுவார்...உனக்கேனடி விடுதலை;உனக்கா நான் வாங்கித் தந்தேன் விடுதலை...என்று பித்தானக மாறி பிதற்றுவான்!* பெண்ணே...வாங்கித் தந்த விடுதலைதன்னம்பிக்கையை உயர்த்திவீட்டில் குத்து விளக்கு ஏற்றத்தானேஒழிய...வீட்டை கொளுத்தும் கொள்ளியாக்க அல்ல!* வாங்கிய விடுதலையைவீணாக்காதே...மீண்டும்மூலையில் முடங்காதே!— டி.பத்மப்ரியா சாந்தகுமார்.