உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

பேச்சு பேச்சா இருக்கணும்!கோபமாய் பேசினால்குணத்தை இழப்பாய்!அதிகமாய் பேசினால்அமைதியை இழப்பாய்!வேகமாய் பேசினால்அர்த்தத்தை இழப்பாய்!வெட்டியாய் பேசினால்வேலையை இழப்பாய்!ஆணவமாய் பேசினால்அன்பை இழப்பாய்!பொய்யாய் பேசினால்பெயரை இழப்பாய்!சிந்தித்து பேசினால்சிறப்பாய் இருப்பாய்!சிரித்து பேசினால்அன்பாக இருப்பாய்!பேசுங்கள்:தாயிடம் அன்பாகதந்தையிடம் பண்பாகதங்கையிடம் பாசமாகஆசிரியரிடம் உரிமையாககடவுளிடம் மவுனமாக!— ஆர்.மீனாட்சி, திண்டுக்கல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !