உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நாளை!.............விடியலொன்றுவிழி திறக்குமேயானால்அதன் விடிவெள்ளிநானாக இருக்க வேண்டும்!நாளைஒளியொன்றுஉலகத்தில் படருமேயானால்உதிக்கும் சூரியன்நானாக இருக்க வேண்டும்!நாளைவிதையொன்றுமுளை விடுமேயானால்அதை விதைத்ததுநானாக இருக்க வேண்டும்!நாளைவிருட்சமொன்றுவிரிந்து கிடக்குமேயானால்அதன் வேருக்கு நீருற்றியதுநானாக இருக்க வேண்டும்!நாளை தேவையொன்றுதேடி அலையுமேயானால் அதன்முகவரி சொல்லும் முதல் மனிதன்நானாக இருக்க வேண்டும்!நாளைதுயரமொன்றுதொடருமேயானால் அதை தூக்கி சுமக்கும் தோழன்நானாக இருக்க வேண்டும்!நாளைநன்மையொன்றுவளருமேயானால்அதன் நாற்றங்கால்நானாக இருக்க வேண்டும்!நாளைஉயிரொன்றுஉணவு தேடி அலையுமேயானால்அள்ளிக் கொடுக்கும் வள்ளல்நானாக இருக்க வேண்டும்!நாளைசரித்திரமொன்றுதுவங்குமேயானால்அதில் சாதித்ததுநானாக இருக்க வேண்டும்!நாளைமரணமொன்றுநடக்குமேயானால்மரண மாலை சுமக்கும் மனிதன்நானாக இருக்க வேண்டும்!நாளைபுது யுகமொன்றுபூக்குமேயானால்அதன் நாயகன்நானாக இருக்க வேண்டும்!— க.அழகர்சாமி,கொச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !