உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நாங்கள் நாகரிகமானவர்கள்!ஈட்டிகளை எல்லாம்ஏவுகணைகளாய் மாற்றி விட்டோம்!எறியும் கற்களை எல்லாம்வெடிகுண்டுகளாய் ஆக்கி விட்டோம்!அம்புபோட்டுமனிதர்களை கொல்வதை விடஅணுகுண்டு போட்டுமொத்தமாகக் கொல்லும் மார்க்கம் தெரிந்து விட்டோம்!நதிக்கரைகளில் படை கூட்டிஎதிரிகளை வீழ்த்தும் நிலை மாற்றிநதி நீரில் விஷம் கலக்கும்நயவஞ்சகம் கற்றோம்!நேருக்கு நேர் நின்றுபோர் செய்யும் நிலை மாறிமறைந்திருந்து போர் செய்யும்கொரில்லா முறையும் அறிந்தோம்!நிராயுதபாணிகளை தாக்காதநியாயமான நிலையை மாற்றிசமாதானக் கொடி காட்டுவோரையும்சாகடிக்கும் சாமர்த்தியம் கற்றோம்!புறமுதுகு காட்டி ஓடுவோரைபுண்படுத்தாத நிலையை மாற்றிமுதுகுகளை காட்டி நிற்க வைத்துமுறையின்றி சுடும் முறையையும் தெரிந்து கொண்டோம்!வெளிப்படையாகவே போர் செய்யும்விவேகத்தை மாற்றிகண்ணி வெடி புதைக்கும்கலையையும் கற்றோம்ஆம்...நாங்கள் நாகரிகமானவர்கள்!— இளசை சுந்தரம், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !