கவிதைச்சோலை!
வாழ்வியல் எது?எதைத் தேடிக்கொண்டிருக்கிறோம்இருபத்து நான்குமணி நேரமும்...எதைப் பிடிக்கஓடிக் கொண்டிருக்கிறோம்வாழ்நாள்முழுமையும்...காலை - மாலைஇரவு - பகல்ஆதவனும் - வெண்ணிலவும்ஓடும் ஆறும்...வான் முட்டும்மாமலைகள் - வனம்முழுவதும் மலர்களின்சுகந்தம்...எங்கு எதைத்தேடி ஓடுகிறோம்எங்கே... எங்கே...என எதற்காக அலைகிறோம்...நாளைபதவிக் காலம் முடிந்துமுதிர் வயதில்என் நாளைக்கென...தள்ளி விட்டுநுரை தள்ளி ஓடும்இந்த வாழ்வில்எதைக் காண விழைகிறோம்...சின்ன மழைத்துளியின்சிறு புல்லின் நுனியில்மகுடமான பனித்துளியில்மலர்ந்து விரியும்வானவில்லிலும் கூட...ரசித்துப் பார்க்கமணித்துளி செலவழிக்கமுடியாமல் - நேரமின்மைநம்மை எந்த வாழ்வியலுக்குஇட்டுச் செல்கிறது...ஓடுபவர்களே...கொஞ்சம் சொல்லிவிட்டுப்போங்கள்!—ரஜகை நிலவன், மும்பை.