உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

காலம்...குளிர்பான பாட்டில் மூடியைபற்களால் திறந்துஆச்சரியப்பட வைத்தது ஒரு காலம்...பத்து பேர் சேர்ந்து அமுக்கினாலும்திமிறி எழுந்து, கபடி விளையாட்டில்எல்லையைத் தொட்டதுஒரு காலம்...மாடிப் படிக்கட்டுகளில்இரண்டு இரண்டு படிகளாகஏறி இறங்கி, தாவிக் குதித்ததுஒரு காலம்...மார்பெல்லாம் கிழித்தாலும்பனை மரம் ஏறி அந்தரத்தில்தொங்கி, நுங்கு பறித்ததுஒரு காலம்...டிசம்பர் 31 இரவில் பிரதான சாலையில், 100 கி.மீ.,வேகத்தில் பைக் ஓட்டியதுஒரு காலம்...ஓடும் பஸ்சிலும், ரயிலிலும்ஏறி இறங்கி வேடிக்கைகாட்டி விளையாடியதுஒரு காலம்...போட்டி போட்டு கணக்கில்லாமல் தண்டால் பஸ்கி எடுத்ததுஒரு காலம்...இப்போது,நடை வண்டி ஓட்டும்பேரனிடம் மெதுவாக நட என்றுஅறிவுரை சொல்வதுஒரு காலம்!- சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !