உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நட்பு!எப்போதாவதுசந்திப்பதல்ல நட்பு...எப்போதுமேசந்திக்க செய்வதேநட்பு!முழு நிலவாய்முளைத்துபிறையாய்தேய்வதல்ல நட்பு...பிறையாய் தோன்றிமுழு நிலவாய்வளர்வதே நட்பு!சிரித்து பேசுவதுமட்டுமல்ல நட்பு...சிந்திக்க துாண்டிசெயல்படவைப்பதே நட்பு!அடிமைப்பட்டுகிடப்பதல்ல நட்பு...அறிவை வளர்த்தெடுப்பதேநட்பு!பழகுவதோடு மட்டும்நின்று விடுவதல்ல நட்பு...பாடப் புத்தகமாய்இருப்பதே நட்பு!உதவி செய்வதுமட்டுமல்ல நட்பு...உயிருக்கு உயிராய்வாழ்வதே நட்பு!முக மலர்ச்சிக்குமட்டுமேபயன்படுவதல்ல நட்பு...இதய உணர்ச்சிக்குவழிவகை செய்வதேநட்பு!இன்பத்தில் மட்டும்பங்கெடுப்பது நட்பல்ல...துயரத்தில் உடனிருந்துதோள் கொடுப்பதேநட்பு!பெருமை பேசிஅலைவதில்லை நட்பு...பெரும் புயலில்பேராண்மை காப்பதேநட்பு!வழி துணைக்குமட்டுமேவருவது நட்பல்ல...வாழ்வின் கடைசி வரையில்துாணாய் இருந்துதுணை நிற்பதேநட்பு!நட்பு என்பதுஅரிய செயல்...அதைநம்பிக்கையோடு காப்பதேஉரிய செயல்!தே. இளையராஜா, விழுப்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !