கவிதைச்சோலை!
பிழைப்பு!நீயும் அரசியல்வாதிநானும் அரசியல்வாதியார் சின்ன திருடன்என்பது தான் கேள்வி!என் மீது குற்றம் சொல்லஉனக்கு என்ன தகுதி இருக்கிறது?உன் வீட்டில், 'ரெய்டு'என் வீட்டிலும், 'ரெய்டு'கணக்கில் வராதகட்டு கட்டாய் பணம்!நீயும் வாரிசை வளர்க்கிறாய்நானும் வாரிசை வளர்க்கிறேன்!உன் கட்சிக்காரன்பாலியல் குற்றவாளிஎன் கட்சிக்காரனும்பாலியல் குற்றவாளி!உன் மீதும்கிரிமினல் வழக்குஎன் மீதும்கிரிமினல் வழக்கு!அசிங்கமாகதிட்டிவிட்டு பின் வந்து இணைந்தாலும்சேர்த்துக் கொள்கிறாய்!நானும் திட்டியவர்களைகட்டியணைத்துவரவேற்று,பதவி கொடுக்கிறேன்!இப்படியாகநீயும், நானும்ஒன்றாக இருந்தாலும்,கட்சிகள் வேறு வேறு!எதிர் எதிர் துருவமாகநாம் இருப்பினும்பொய் சொல்லி பிழைப்பதில்ஒற்றுமையானவர்கள்தானே?— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.