கவிதைச்சோலை!
முடிவும் வருமோதினமும் ஒரு காயம்அதுவும் மனக்காயம்ஆறுதல் சொல்லவழியில்லை!தினமும் ஒவ்வொரு நிகழ்வுமனம் விட்டு பேசநேரமில்லை!தினமும் ஒரு இழப்புபகிர்ந்து கொள்ளமனமில்லைவேக ஓட்டம்பணத் தேடல்!உழைப்பு என்பதைகமிஷன் என்றபேய் பிடித்தாட்ட...சோம்பேறியாய் காலம்வியர்வை சிந்தாமல்உடல் நோயால்நோகும் நேரம்!விட்டுக் கொடுத்துதட்டிக் கொடுத்துஅதட்டிக் கொடுத்துகாரியம் நடந்ததொருகாலம்...வாய் பேச்சு, பேரம்,வாக்குவாதம், சுதந்திரம்தன்மானம் பார்வையில்நடைமுறையில் மட்டும்!ஏக்கமும், தாகமும்கானல் நீராய்சுயநலம் மண்டிபுதராய் கிடக்க...மனிதாபிமானம், மனிதநேயம்சுருண்டு ஓரத்தில் கிடக்கநகரும்நரக வாழ்க்கை...மனச்சுமை, மன அழுத்தமேபிரதான ஓட்டம்என்று தணியும்இந்த வேட்கைமனித போலி போர்வை?ஆர். சீதாராமன், சீர்காழி.