கவிதைச்சோலை!
கற்றுக்கொள்!தர்மம் செய்யகற்றுக்கொள்...தலைமுறைகள்தழைத்தோங்கும்!சேவை செய்யகற்றுக்கொள்...எல்லையில்லாசந்தோஷம் பிறக்கும்!தியாகம் செய்யகற்றுக்கொள்...திக்கெட்டும்புகழ் மணக்கும்!விட்டுக் கொடுக்ககற்றுக்கொள்...வஞ்சக பேய்கள்விலகி ஓடும்!இனிமையாக பேசகற்றுக்கொள்...ஈர்க்கும் ஆற்றல்பெருக்கெடுக்கும்!கருணை காட்டகற்றுக்கொள்...சொர்க்க வாசல்வழி திறக்கும்!கல்வி புகட்டகற்றுக்கொள்...லட்சிய பாதையில்புகழ் ஒளி வீசும்!மனித நேயத்தைகற்றுக்கொள்...பெயரும், புகழும்கொடி கட்டி பறக்கும்!— மணியட்டி மூர்த்தி, கோவை