கவிதைச்சோலை!
எது ஆயுதம்?மற்றவர் உயர்வைமலிவாய் நோக்கும்பொறாமையாமுயற்சியால்அவரை முந்த நினைக்கும்போட்டி மனப்பான்மையாஎது உனது ஆயுதம்?உற்றோர் உயரஉழைக்கும்பொது நலமாதன் உயர்வேபெரிதென எண்ணும்சுயநலமாஎது உனது ஆயுதம்?எல்லாமே எனதுஎனும் பேராசையாஅளவாய்வாழ நினைக்கும்ஆசையாஎது உனது ஆயுதம்?எல்லாவற்றிற்கும்தீர்வுவன்முறையாஎத்தரப்பிலும்சேதமில்லாஅஹிம்சையாஎது உனது ஆயுதம்?அறிவை வளர்க்கதேவைஒழுங்கீனமான பள்ளியாஆசான்களை மதிக்கும்நல் ஒழுக்கமான கல்வியாஎது உனது ஆயுதம்?இரண்டில் ஒன்றைதேர்ந்தெடுக்கும்வாய்ப்பும்உன் முன் வந்திருக்கு!பிந்தியதுஉன் வாழ்வைவளப்படுத்தி சென்றிடும்மாற்று கருத்து எதற்கு!இ. சூர்யா, கடலுார்.