உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

முரண்!அலைகடல் ஏனோஎன்னை அச்சுறுத்துகிறதுஅலைகளின் ஆவேசம்ஆழ் கடலின் அமைதியின்ஆவேசமான வெளிப்பாடோதெரியவில்லை!மனித மனமும்ஓர் ஆழ் கடல் தான்வெளி காட்டுவதில்லைஅதில் தான் வேற்றுமைஅலைபாயும் உள்ளங்களைவெளியில் காட்டாமல்ஆழ் கடலின் அமைதியைஅணிந்து வாழ்கிறோம்!ஆயிரம் வாசல் இதயம்இன்பங்கள், துன்பங்கள் உதயம், அஸ்தமனம்வெளியில் தெரிவதுகொஞ்சமே தான்புயலும், காற்றும்உள்ளேயே தான்!கடற்கரையில் அமைதி தேடும்நாம் கடலிடம் சொல்வதில்லைநீயும், நானும் ஒன்று தான்உனக்கு எங்களிடம் பயமில்லைஆனால், நாங்கள் உன்னைக்கண்டு ஆனந்தம் கொள்வதுடன்அச்சமும் கொள்கிறோம்!உன்னிடம் உருவாகும் புயலோசுனாமியோ எங்களை நொடியில்அழித்து விடலாம் ஆனால்எங்கள் உள்ளத்தில் உறங்கும்புயலை வென்று அமைதி காணஉன் கரைக்கு வருகிறோமேஎன்ன ஓர் முரண்?— ஜி. சுவாமிநாதன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !