கவிதைச்சோலை!
வரவேற்போம் தை பிறப்பை...தமிழ்த்திரு நாட்டின்தனிப்பெருந் திருநாள்பொங்கல் திருநாள்!பொங்கல் -நம் அடையாளம்நம் கலாசாரத்தின்ஆணி வேர்!உழவர்களுக்காகவிழா எடுக்கும்ஒரே மண்நம் மண் தான்!ஒவ்வொரு மனிதனும்உண்ணும் உணவுக்குநன்றி சொல்லும் நாள்!நாம் பொங்க போவதுசர்க்கரை பொங்கல் மட்டுமல்ல -சபத பொங்கலாகவும் அமையட்டும்!மீண்டும் ஒருவரலாறு படைக்கவரவேற்போம் தை பிறப்பை...மக்கள் மங்கல வாழ்வு பெறநம் திருநாட்டில் இனிஏழ்மையும், தாழ்மையும் நீங்கவளமையும், உயர்வும் பெறஉறுதி எடுப்போம்!மக்கள் நலமுறவும்உடல் நலம் பலமுறவும்ஞானமும், கல்வியும் சிறப்புறபுது வசந்தம் எங்கும் மிளிரகைக் கோர்ப்போம்!மத வெறி, நிற வெறி நீங்கசத்திய சன்மார்க்கம்தரணியில் தங்க உழைத்திடுவோம்!செம்மையும், இன்பமும்நாட்டில் கொழிக்கதானிய கதிர் வளம் குவியபுது வளம் எங்கும் பெருகஉழவை போற்றுவோம்!சர்க்கரை பொங்கலும்கன்னல் கரும்பும்உற்றாரும் சுற்றாரும் கூடி சுவைக்கபொங்கட்டும் மங்கல பொங்கல்...வாழிய பொங்கல் வாழிய உலகம்!— செல்வி நடேசன், சென்னை.