உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மதிப்புக்குரியவளே!பெண்ணே உன்னை நீ மதிபெறுவாய் என்றும் நிம்மதிகீழாய் நினைப்போரை மிதிமாறும் உந்தன் தலைவிதி!தோலின் நிறம் நேசிக்கும்தோழர்களை நிராகரி - உன்உள்ளத்தை வாசிக்கும்உறவே உனக்கு சரி!முகநுால் காட்டாது அகம் - அதைமுற்றாக விலக்குவதே சுகம்பொல்லாதோர் வலை விரிக்கும் களம்சிக்கினால் சீரழிவே நிஜம்!உடையழகும், நடையழகும்உள்ளழகும் காட்டஉற்றவன் ஒருவனுண்டுஊருக்கே காட்டுவதில்உனக்கேதான் சிக்கலுண்டு!விளையாட்டாய் பதிவு செய்தவீடியோவால் விருப்பங்கள்ஆயிரந்தான் வரக்கூடும்எல்லாமே துாண்டில் தான்!சொல்லாலே உனை வளைக்கும்பொல்லாத போதைதான்தொல்லைகளை தொடர்ந்து தரும்வில்லன்களின் வேலை தான்!அறிவோடு, அளவோடு அணுகாத'ஆப்' எல்லாம் பொல்லாப்பேஅது தவிர்த்தால் நீபெறுவாய் நல் வாய்ப்பே!நாகரிக உடைக்கில்லை தடைநளினத்தை வெளிக்காட்டும்வேண்டாத சிற்றுடைக்குகொடுப்போம் விடை!ஊடக வெளிச்சம்உன் மேல் படுவதுஉயர்ந்தவள் நீயெனஉலகிற்கு காட்டவே இருக்கட்டும்!பெண்ணே உன்னை நீ மதிபெறுவாய் என்றும் நிம்மதிகீழாய் நினைப்போரை மிதிமாறும் உந்தன் தலைவிதி!ரா. துரைராஜன், புதுச்சேரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !